ரங்கன்: உங்கள் முத்திரை என்று கருதப்பட்ட பல விஷயங்கள், மௌனராகத்திலேயே இடம்பெற்றிருந்தன. அவற்றில், இருள் செறிந்த பின்னணியில் செய்யப்பட்ட ஒளிப்பதிவு, மரபு சாரா நேர்த்தியான செட்கள் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. ரத்னம்: மொழி தெரியாத, குளிர் நிறைந்த, ஊருக்குச் செல்லும் பெண்ணைப்பற்றிய கதை இது. முதலில் அவளுக்கு எல்லாமே அந்நியமாகப் படுகிறது. பின் அவள் அங்கேயே வாழப் பழகிக்கொள்கிறாள். அதனால்தான் டெல்லியைத் தேர்ந்தெடுத்தோம். இது ஒரு இண்டோர் (Indoor) படம் என்பதால் பி.சி.யும் நானும் சோதனை முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக இருந்தோம். வெறும் நான்கு சுவர்களுக்குள் எடுத்திருக்கிறார்களே என்று யாரும் முகம் சுளித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். இண்டோரும் அவுட்டோர் போல உயிரோட்டமாக இருக்கவேண்டும் என்று எண்ணினோம். ஏனெனில் படத்தில் நிறையக் கதாப்பாத்திரங்கள் இல்லை. அதனால் படம் நாடக பாணியில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அப்போதுதான் பி.சி., பேக் லைட்டிங் உத்தியைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தார். அது மிக அற்புதமான, புத்திசாலித்தனமான யோசனை. தரணிதான் சென்னையில் அந்த வீட்டைக் கண்டுபிடித்துக் க...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!