முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நவீன டிஜிடல் சினிமாக் காமிராக்கள்: ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்"- ஸ்டூவர்ட் ப்ராண்ட் “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே வருகின்றன . குறிப்பாக ' டிஜிட்டல் ' திரைப்படம் என்னும் நுட்பத்தின் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது . ' டிஜிட்டல் ' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு , ஒலிப்பதிவு , வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என சினிமாவின் அனைத்துப் பிரிவுகளும் டிஜிடல் மயமாவதையும்தான் மொத்தமாகக் குறிக்கிறது . ' டிஜிட்டல் ' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும் , நாம் ஏன் அதில் இறங்கிச் செயல்படாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறோம் என்பது மிக முக்கியமான கேள்வி . ஒரு துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அத...