எங்கள் ‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படத்தில் வரும் இப்பாடலைக் கேட்ட கணத்திலேயே எனக்குப் பிடித்துப்போய் விட்டது. படத்தின் உயிர்ப்பை அப்படியே கொண்டு வந்திருக்கிற பாடல் இது. பாடலின் வரிகளை பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்கள் எழுத, சக்திஸ்ரீ கோபாலன் பாட, கேபா தன் கிடார் மீட்டலின் வழியே உயிரூட்ட, ஒரு அற்புத அனுபத்திற்குள் நம்மை ஆழ்த்தியிருக்கிறார் இளம் இசையமைப்பாளர் திரு.வேத் சங்கர் சுகவனம். எங்கள் குழுவில், அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திய இப்பாடலை, படத்தின் முன்னோட்டமாக உங்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்பினோம். திரைப்படத்தில் வரும் காட்சிகளோடு இப்பாடலை தற்போது வெளியிட முடியாத நிலையில், இதற்கென்றே ஒரு காட்சி வடிவத்தை உருவாக்கும் தேவை ஏற்பட்டது. இப்பாடலின் உயிர்நாடிகளாக, வரிகளோடு இணைந்து குரலும் கிடாரும் இருப்பதை உணரமுடியும். ஆகவே அக்கலைஞர்களை உங்கள் முன்னால் கொண்டு வந்திருக்கிறோம். கடல், மரியான் போன்ற படங்களில் ஏ.ஆர்.ரகுமான் குழுவில் கிடார் மீட்டிய கேபாவுக்கும், ’நெஞ்சுக்குள்ளே’ பாடலின் மூலம் நம்மைக் கவர்ந்த சக்தி ஸ்ரீ கோபாலனுக்கும் முன்னுரையோ அறிமுகமோ தேவையில்லை. குழந்தைகள், கடவு...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!