எங்கள் குழுவில், அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திய இப்பாடலை, படத்தின் முன்னோட்டமாக உங்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்பினோம். திரைப்படத்தில் வரும் காட்சிகளோடு இப்பாடலை தற்போது வெளியிட முடியாத நிலையில், இதற்கென்றே ஒரு காட்சி வடிவத்தை உருவாக்கும் தேவை ஏற்பட்டது. இப்பாடலின் உயிர்நாடிகளாக, வரிகளோடு இணைந்து குரலும் கிடாரும் இருப்பதை உணரமுடியும். ஆகவே அக்கலைஞர்களை உங்கள் முன்னால் கொண்டு வந்திருக்கிறோம். கடல், மரியான் போன்ற படங்களில் ஏ.ஆர்.ரகுமான் குழுவில் கிடார் மீட்டிய கேபாவுக்கும், ’நெஞ்சுக்குள்ளே’ பாடலின் மூலம் நம்மைக் கவர்ந்த சக்தி ஸ்ரீ கோபாலனுக்கும் முன்னுரையோ அறிமுகமோ தேவையில்லை.
குழந்தைகள், கடவுளின் பிரதிகள் என்பதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூமிக்கு அருளப்படும் வரம். ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தைகள் கொண்டு வரும் வசந்தத்தை, மகிழ்ச்சியை சொல்லில் அடக்க முடியாது. பலரின் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பதே குழந்தைகள்தான். குழந்தைகளே நம்மை மீட்க வந்த மீட்பர்கள். இப்பாடலின் ஒவ்வொரு வரியும் அதைத்தான் சொல்லுகின்றன... எங்கள் திரைப்படத்தின் மைய கருத்தும் அதுதான்!
அமைதியான சூழலில் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.. உங்களை அடிமை கொள்ளும் இப்பாடல்!
வாழ்த்துக்கள் சார்.... மிகச் சிறப்பாக இருக்கிறது... படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்....
பதிலளிநீக்குvery Soothing music & voice .
பதிலளிநீக்குBlack & white stills also too good ...
Congrats to team AKC...
Dear Sir,
பதிலளிநீக்குArumayana Thalattu...
Melody Camara Moving...
Nice Lighting...
I realise your perfomance sir..
I realy miss sir...
I Wish you All Success to sir..
-thamizh sathya
கேபா வின் கிடார் இசையோடு சக்திஸ்ரீ யின் குரல் தேனாக ஒலிக்கிறது முத்துக்குமாரின் அருமையான வரிகளை உங்கள் கேமரா நிச்சயம் கவித்துவத்துடன் பதிவு செய்திருக்கும் வாழ்த்துக்கள் விஜய்
பதிலளிநீக்கு