டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சியை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். RED ONE கேமராவின் அறிமுகத்தால் சூடுபிடித்த இத்துறை, கேனானின் EOS 5D, 7D, C300, C500 போன்ற விலை குறைந்த கேமராக்களினால் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் நடைபோட்டதையும், மறுபுறம் ARRI போன்ற பெரும் நிறுவனங்களின் டிஜிட்டல் கேமராக்களினால் ( D20, D21, Alexa, Alexa XT) அதன் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். மேலும் RED நிறுவனம் அதனுடைய அடுத்தக் கட்டமாக RED EPIC(5K), RED Scarlet(4K) போன்ற கேமராக்களை அறிமுகப்படுத்தியதையும், தற்போது RED DRAGON(6K) என்ற மேம்படுத்தப்பட்ட சென்சாரையும் சந்தைக்கு கொண்டு வந்து டிஜிட்டல் சினிமாவின் ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் இத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் நன்கறிந்ததே. அதே நேரம் மேலும் பல நிறுவனங்கள் இத்துறையில் கால் பதிக்க முயன்று வருகின்றன என்பதையும் நாம் அறிவோம். இதில் SONY,PANASONIC போன்ற நிறுவனங்கள் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றன. அந்நிறுவனங்களின் பல கேமராக்கள் சந்தைக்கு வந்துவிட்டன. இதில் SONY நிறுவனத்தின் டிஜிட்டல் சினிமா...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!