முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Rule of Thirds: 'முப்பாக அமைப்பு விதி' - ஒரு அறிமுகம்

சில புகைப்படங்கள் பார்த்தவுடன் சட்டென்று நம் மனதில் ஒட்டிக்கொள்கின்றன. அது நம்மை வசீகரிப்பதாக நம் மனது சொல்கிறது. அதற்கு காரணமென்ன? அப்புகைப்படத்திலிருக்கும் காட்சியா? அப்புகைப்படத்தின் வண்ணச்சேர்க்கையா? ஒளிச்சிதறல்களா? அது சொல்லும் செய்தியா? எது.. எது நம்மை அப்புகைப்படத்தை நோக்கி இழுக்கிறது? இதற்கான சரியான பதில், மேலே சொன்ன எல்லாமே என்றுதான் இருக்கும். ஆமாம், ஒரு புகைப்படம் என்பது ஆதாரமாகக் கருப்பொருளைக் கொண்டிருக்க வேண்டும். அதன் பொருட்டே வண்ணமும், ஒளியும், இருளும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவை எல்லாம் சேர்ந்தே அப்புகைப்படமெடுத்த கலைஞனின் எண்ணத்தை பார்வையாளனுக்கு கடத்துகின்றன. சரி. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் படைப்பாற்றல் மற்றும் உள்ளடக்கத்தைச் சார்ந்தவை என்றாகிறது. எனில், இதன் பின்னேயிருக்கும் தொழில்நுட்பத்தைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாமா? எத்தொழிலாகட்டும் அல்லது எக்கலையாகட்டும் அவற்றிற்கென சில ஆதார விதிகளும், நுட்பங்களும் உண்டு என்பதை நாம் அறிவோம். ஒளிப்பதிவுத்துறையில், புகைப்படத்துறையில் மிக முக்கியமானதும் ஆதாரமானதுமான பல்வேறு கூறுகளின் ஒத்திசைவை / கூ...