முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘ஒளி எனும் மொழி’ நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் - Part 2

 ‘ஒளி எனும் மொழி’ நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் - Part 2

நன்றி - ‘ஒளி எனும் மொழி’ நூல் வெளியீட்டு விழா

ஒருபுறம் நான் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ' தொட்டால் தொடரும் ' திரைப்படத்தின் வெளியீடு , ஒளிப்பதிவு சார்ந்து அது பெற்றுத்தரும் நற்பெயர் , மறுபுறம் ' ஒளி எனும் மொழி ' புத்தகத்தின் வெளியீடு, அது சார்ந்து நான் எதிர்பாரா சில எதிர்வினைகள் என இரண்டும் அடுத்தடுத்து நிகழ்ந்தது என் மனதிற்கு நிறைவைத் தருகிறது . வருங்காலம் குறித்தான நம்பிக்கை வலுப்படும் இவ்வழகிய தருணத்தில் , வாழ்வின் எதிர்கால திட்டமென்று ஒன்றை மனம் வரித்துக்கொண்ட இளம் பருவத்தை நினைவு கூர்கிறேன் . பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி செல்லவேண்டுமென்ற காலம் வந்த போது உருவான கேள்வி அது . " வாழ்வில் நான் என்னவாக வேண்டும் ..?!" பதில்கள் பல தோன்றின . இராணுவ அதிகாரியாக , IPS முடித்த காவல் துறை அதிகாரியாக , ஓவியனாக , ஐந்து நட்சத்திர உணவு விடுதியின் சமையல்காரனாக , புகைப்படக்காரனாக , ஒளிப்பதிவாளனாக என்று பல பரிந்துரைகளை மனம் முன்மொழிந்தது . ஒவ்வொன்றிலுமிருந்த விருப்பம் , மன திடம் மற்றும் சாத்தியத்தை பகுத்தாய்ந்து முடிவொன்றை எடுத்த அந்த கணம் இப்...