நாம் விரும்புகிறோமோ இல்லையோ .. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது , டிஜிட்டல் தொழில்நுட்பம் தன் ஆளுமையை திரைத்துறையின் மீது எவ்வித சந்தேகத்துக்குமிடமின்றி அழுத்தமாக நிறுவி விட்டது . இது சிலருக்கு விசித்திரமாக கூட இருக்கலாம் . கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செல்லுலாயிட் படச்சுருள் (Film) மூலமே திரைப்படங்கள் எடுக்கப்பட்டு, திரையிடப்பட்டு வந்தன . அந்த நாட்கள், ஒரு கண்கட்டுவித்தையைப் போல திடுமென காணாமல் போய்விட்டன . இன்னும் அதிக நாட்கள் கூட ஆகிவிடவில்லை . செல்லுலாயிடில் படம் பிடித்து , லேபிற்கு அனுப்பி , டெவலப் செய்து , பிரதி எடுத்துப் பார்த்து , டெலிசினி செய்து , படத்தொகுப்பு செய்த காலம் சட்டென பழங்கதையாகிவிட்டது . ஹாலிவுட் , பாலிவுட் , கோலிவுட் என எல்லாவுட்டுகளும் நம் கண்முன்னே டிஜிட்டல் மயமாகிவிட்டன . 1980 - களில் சோனி நிறுவனம் தன்னுடைய ‘analog - HDVS professional video’ கேமராக்களின் துணையுடன் ‘Electronic Cinematography’ என்னும் கருத்தாக்கத்தை முன்மொழிந்தது . அதன் பலனாக 1987 - இல் ‘Julia and Julia’ என்னும் படம் டிஜி
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!