தமிழ்ச் சூழலில், துறைச்சார்ந்த கருத்துகளை, பார்வைகளை, விவாதத்தை, விமர்சனத்தை முன்னெடுக்கிற இதழ்கள் குறைவு. பல பத்திரிக்கைகள் தமிழில் வெளிவருகின்றன. பெரும்பாலும் அவை பல துறைகளைப்பற்றி பேசக்கூடியவைகளாகத்தானிருக்கின்றன. குறிப்பிட்ட, ஒரு துறைச்சார்ந்து பேசக்கூடிய, இயங்கக்கூடியத் பத்திரிக்கைகள் மிகவும் குறைவு. ஆயினும், அவை சிறுபத்திரிக்கைகள் என்ற அளவில்தான் இருக்கின்றன. குறிப்பாக திரைப்படம் சார்ந்து பேசக்கூடிய சிறுபத்திரிக்கைகள் சில இருக்கின்றன. வணிக இதழ்கள் விவாதிக்கும் சினிமா என்பது நடிகை நடிகர்களே பிரதானமாக கொண்டது என்பதை நாம் அறிவோம். திரைப்படம், அது பேசும் கருத்து, படைப்பாற்றல், அழகியல், அரசியல், தொழில்நுட்பம் பற்றி குறிப்பிடும் படியான சில சிறுபத்திரிக்கைகள் தான் பேசுகின்றன. அவ்வகையில், தமிழ் ஸ்டியோவிலிருந்து இன்று (21/06/15) ‘படச்சுருள்’ என்னும் இதழ் துவங்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் இயக்குனர்கள் திரு.ஞானராஜசேகரன், திரு.பாலாஜி சக்திவேல், ஒளிப்பதிவாளர் திரு.ரவிவர்மன், ஓவியர் திரு.மருது மற்றும் காவல்துறை அதிகாரி திருமதி.திலகவதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்றா
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!