முந்தைய கட்டுரையில் ‘VFX’ – இன் முன்னோடி தொழில்நுட்பங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்க்கலாம். முந்தைய கட்டுரையைப் படிக்காதவர்கள் படித்துவிட்டு வந்துவிடுங்கள். ----------------------------------------------------------------------------------------------------------------- Jason and the Argonauts — Stop Motion: திரைப்படம் என்பதே தொடர்ச்சியாக பதிவு செய்யப்படும் ஃப்ரேம்களால் (Frames) ஆனது என்பதையும், அப்படிப் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு ஃப்ரேமிலும், பிம்பம் சிறிது நகர்ந்திருக்கும் என்பதையும், அதை நாம் ஒரே சீராக ஓட்டிப்பார்ப்பதன் மூலம் அதில் உறைந்திருக்கும் நகர்வை உணர்கிறோம் என்பதையும் ஏற்கனவே நாம் அறிவோம். இந்த ஸ்டாப் மோஷன் என்பதும் ஏறக்குறைய அதேதான். நகரும் தன்மையற்ற பொருட்களை நாமாக நகர்த்தி வைப்பதன் மூலம், அப்பொருள் நகர்வதாக ஒரு பாவனையை உருவாக்கலாம். உதாரணத்திற்கு, காட்சியில் ஒரு பொம்மை இருப்பதாக கொள்வோம். அந்த பொம்மைக்குள் ஒரு பேய் புகுந்துகொண்டு அதை நகர்த்துவதாக காட்ட வேண்டுமென்றால், என்ன செய்வது? அங்கேதான் இந்த ஸ்டாப் மோஷன் தொழில்நுட்ப...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!