கிட்டத்தட்ட, வாழ்வின் பாதி நாட்களை / வருடங்களை கடந்து விட்டேன். கடந்து வந்த வாழ்வை திரும்பிப் பார்க்கையில், ஒன்று புலப்படுகிறது.. ‘எதுவும் நிரந்தமில்லை’ வயதுக்கேற்ப சிந்தனைகள் மாறுகின்றன. சிந்தனைக்கேற்ப விரும்பங்கள் மாறுகின்றன. விருப்பங்களின் பொருட்டு செயல்கள் மாறுகின்றன. செயல்களைப்பொறுத்து சிந்தனைகள் மாறுகின்றன. நிகழ்ந்தன, நிகழ்வன, நிகழப்போவன என சிந்தனை எப்போதும் கலவையாகவே இருக்கிறது. நிகழ்ந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு, நிகழப்போவதை மனம் திட்டமிடுகிறது, எதிர்ப்பார்க்கிறது. ஆனால், மனதுக்கு மட்டுமே மூன்று காலங்கள் இருக்கிறது, வாழ்விற்கில்லை. வாழ்வு நிகழ்காலத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது ஒரு நதியைப்போல வெறுமனே ஓடிக்கொண்டிருக்கிறது. ‘ஓடிக்கொண்டே’ இருக்கிறது. எத்தனை நிகழ்வுகள், எத்தனைக் கவலைகள், எத்தனை மகிழ்ச்சி, எத்தனை ஏமாற்றம், எத்தனைக் கனவுகள்.. எல்லாமே கடந்து சென்று கொண்டேதான் இருக்கின்றன. எதிர்ப்பார்ப்பு நம்மை எதிர்காலத்தில் வாழச்செய்கிறது. ஏமாற்றம் கடந்த காலத்தில் வாழச் செய்கிறது. நிகழ்காலம் கடந்துகொண்டிருப்பதை நாம்...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!