முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிடல் கேமரா: அதன் ஆதார தொழில்நுட்பம்

ஃபிலிம் கேமராக்கள், முழுவதுமாக வேதியியல், எந்திரவியல் அடிப்படையில் இயங்குபவை என்பதை நாம் அறிவோம். ஆனால், டிஜிடல் கேமராக்கள் முழுவதுமாக மின்னணுவியல் அடிப்படையில் இயங்குபவையாகும். முக்கிய வேறுபாடாக, ஃபிலிம், அதற்கான அறை, மற்றும் அதை இயக்கும் எந்திர நுட்பங்கள் இல்லை என்பதாலேயே கேமரா, உருவில் ஒப்பீட்டளவில் மிகவும் சிறியதாகிவிடுகிறது, எடை குறைவானதாகி விடுகிறது. பதிலாக, ஒவ்வொரு டிஜிடல் கேமராவுமே பிம்பங்களை டிஜிடல் வடிவில் பதிவு செய்ய, ஏறத்தாழ ஒரு சிறு கணினியையே தன்னகத்தே கொண்டுள்ளது எனலாம். கணினி, பைனரி எனப்படும் கணினியின் புரிதல் மொழியென்றெல்லாம் நாம் நுட்பமாக, ஆழமாகச் செல்லப்போவதில்லை. ஆயினும் கேமராவின் சில முக்கியப் பாகங்களைத் தெரிந்துகொள்வது டிஜிடல் கேமராவைப் புரிந்துகொள்ள, அதனோடு பணிபுரிய ஒரு வழியேற்படுத்தும். லென்ஸுகளைப் பொருத்துமிடம், வியூ ஃபைண்டர்கள் என ஃபிலிம் கேமராவைப்போலவே இதிலும் சில பொதுவான அம்சங்கள் இருப்பினும், பிரதான வேறுபாடு என்பது, ஃபிலிமுக்குப் பதிலாக பிம்பங்களை உணரவும், பதியவும் செய்யக்கூடிய பாகங்களாகும்.  அதற்கும் முன்பாக,   ஏற்கனவே 'டிஜிட்டல் சினிமா'