வணக்கம் நண்பர்களே.. இம்மாதம் 27-28 (மே) ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் இரண்டு நாட்கள் ‘ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை’ நடப்பது உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன். அதற்கான வேலைகள் சிறப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது. பலர் ஆர்வமாக கலந்துக்கொள்கிறார்கள். பயிற்சிப்பட்டறை நடைபெறும் இடத்தை முன்பதிவு செய்துவிட்டோம். தமிழ்நாடு முழுவதுமிருந்தும் பல நண்பர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். கோயம்பத்தூருக்கும் பிறகு, தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் நடத்த முடிவு செய்திருக்கிறோம். டிஜிட்டல் வளர்ச்சியால், சென்னையை தர்த்து பிற பகுதிகளிலும் திரைப்படங்கள் எடுக்கும் முயற்சிகள் நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. ‘இண்டிபென்டண்ட்’ திரைப்படங்களை எடுக்கும் ஆர்வம் எல்லோரும் அதிகரித்திருக்கிறது. ஒரு திரைப்படத்தை எடுப்பதில் பல தொழில்நுட்ப கூறுகள் இருக்கிறது, அதில் ஒன்றான ஒளிப்பதிவு குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொள்ள இப்பயிற்சி வகுப்புகள் உதவும் என்று நம்புகிறோம். ஒளிப்பதிவு குறித்த கனவு கொண்ட அத்தனை பேருக்கும் இது ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கும். இத்துறை குறித்தான புரிதலை இப்பயிற்சி வகுப்பு வழங்கும். மாணவர்...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!