ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை இணையத்தளம்: இயக்குநர் திரு.மிஷ்கின் அவர்கள் இன்று http://imageworkshops.in என்ற எங்கள் வலைத்தளத்தை துவங்கி வைத்தார். எனது வலைப்பூவில் நான் தொடர்ந்து எழுதிவரும், சினிமா ஒளிப்பதிவு சார்ந்த கட்டுரைகளை வாசிக்கும் நண்பர்கள் பலரும் பல சந்தர்ப்பங்களிலும் முன்வைக்கும் கோரிக்கைதான், ஒளிப்பதிவு குறித்தான பயிற்சிப் பட்டறைகளை நடத்துங்கள் என்பது. சில பல ஆண்டுகளாகவே இந்த கோரிக்கை இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் இரண்டு பயிற்சிப்பட்டறைகள் நடத்தினோம். மேலும் பல்வேறு நகரங்களிலிருந்தும் பயிற்சிப்பட்டறைக்கான விருப்பம் வருகிறது. அதற்கான முதற்படியாக, இத்தளத்தை வடிவமைத்திருக்கிறோம். இதில், பாடங்கள் தனித்தனி வகுப்புகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு விருப்பமான வகுப்பை தேர்ந்தெடுங்கள், உங்களைப்பற்றிய தகவல் மற்றும் எந்த பகுதியில் வசிக்கிறீர்கள் என்ற தகவலையும் கொடுங்கள். அதன் அடிப்படையில், வகுப்பையும், இடத்தையும் முடிவு செய்ய எங்களுக்கு ஏதுவாக இருக்கும். இது ஒருவிதமான கருத்துக் கணிப்புக்குத்தான். தேவையை அறிந்துக்கொள்ளுவதற்காகத்தான். விருப்பமான ப...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!