வணக்கம் நண்பர்களே … ! ( முந்தைய பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டவர்களுக்கு ) நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆம் நண்பர்களே.. சென்னையில் ஒரு பயிற்சிப்பட்டறையை நடத்த திட்டமிட்டிருக்கிறோம் . இம்முறை ‘Cinematography Lighting’ பற்றி ( மட்டும் ) பயிற்றுவிக்கப்போகிறோம் . முந்தைய பயிற்சிப்பட்டறையின் தொடர்ச்சியாக இது இருக்கும் . கடந்த பயிற்சிப்பட்டறையில் ஒட்டுமொத்த ஒளிப்பதிவுத் துறைப்பற்றி பார்த்தோம் .. இம்முறை அதில் ஒரு பாடமான ‘ திரைப்பட ஒளிப்பதிவில் ஒளியமைப்பு செய்வது எப்படி ..!?’ என்பதைப்பற்றி விரிவாகக் பார்க்கப்போகிறோம் . ஒரு நாள் பயிற்சிப்பட்டறை . முழுக்க முழுக்க செய்முறை பயிற்சியாக இருக்கும் படி வடிவமைத்திருக்கிறோம் . இம்முறை பிரபல ‘ PANASONIC ’ கேமரா நிறுவனம் நம்மோடு கைகோர்த்திருக்கறார்கள் . அவர்களுடைய புதிய 4K கேமராக்களை இப்பயிற்சிப்பட்டறையில் பயன்படுத்தபோகிறோம் . மேலும் அவர்களுடை...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!