சென்னையில் ஒருநாள் ஒளியமைப்புப் பயிற்சிப்பட்டறை இனிதே நடந்து முடிந்தது. வழக்கம்போல பல்துறை ஆர்வலர்கள், விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், புகைப்படக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள், ஐ.டி துறையினர், பிஸினெஸ்மேன் என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள். கேரளாவிலிருந்து மூன்று மாணவர்கள், பெங்களூரிலிருந்து இரண்டு மாணவர்கள், மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், வேலூர், சென்னை என்று பல்வேறு நகரங்களிலிருந்தும் வந்திருந்திருந்தார்கள். நிறைவான அரங்கம். ஒளிப்பதிவின் அடிப்படை என்ன..? ஒளியமைப்பில் கவனிக்க வேண்டியவை எவை..? அவை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் அவற்றை எல்லாம் நடைமுறையில் சாத்தியமாக்குவது எப்படி என்பதையும் செய்முறை வகுப்பாக நடத்தினோம். அதற்காக, நாங்கள் திரைத்துறையில் பயன்படுத்தும், தொழில்முறை கருவிகளை, விளக்குகளை, அதன் துணைக்கருவிகள் அனைத்தையும் வரவழைத்திருந்தோம். திரைத்துறையில் பயன்படுத்தும் கருவிகள், விளக்குகள் மற்றும் அதன் வகைகள், ஒளியமைப்பில் பயன்படும் துணைக்கருவிகள், அவற்றைப்பயன்படுத்து முறை, என...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!