முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

CINEMATOGRAPHY LIGHTING WORKSHOP - CHENNAI (10/06/17)



சென்னையில் ஒருநாள் ஒளியமைப்புப் பயிற்சிப்பட்டறை இனிதே நடந்து முடிந்தது.  வழக்கம்போல பல்துறை ஆர்வலர்கள், விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், புகைப்படக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள், ஐ.டி துறையினர், பிஸினெஸ்மேன் என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.  கேரளாவிலிருந்து மூன்று மாணவர்கள், பெங்களூரிலிருந்து இரண்டு மாணவர்கள், மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், வேலூர், சென்னை என்று பல்வேறு நகரங்களிலிருந்தும் வந்திருந்திருந்தார்கள். நிறைவான அரங்கம்.

ஒளிப்பதிவின் அடிப்படை என்ன..? ஒளியமைப்பில் கவனிக்க வேண்டியவை எவை..? அவை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் அவற்றை எல்லாம் நடைமுறையில் சாத்தியமாக்குவது எப்படி என்பதையும் செய்முறை வகுப்பாக நடத்தினோம்.  அதற்காக, நாங்கள் திரைத்துறையில் பயன்படுத்தும், தொழில்முறை கருவிகளை, விளக்குகளை, அதன் துணைக்கருவிகள் அனைத்தையும் வரவழைத்திருந்தோம்.  

திரைத்துறையில் பயன்படுத்தும் கருவிகள், விளக்குகள் மற்றும் அதன் வகைகள், ஒளியமைப்பில் பயன்படும் துணைக்கருவிகள், அவற்றைப்பயன்படுத்து முறை, என எல்லாவற்றையும் செயல்முறை விளக்கமாக செய்துக்காட்டினோம்.  ‘Three Point Lighting’ செய்வது எப்படி..? அதை கதையின் தன்மைக்கேற்ப வெவ்வேறு Genre-க்கு பயன்படுத்துவது எப்படி என்பதையும் பார்த்தோம்.  பின்பு, Single Light Source ஒளியமைப்பை செய்வது எப்படி, அதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை..? அதை நடைமுறையில் எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை சொல்லிக்கொடுத்தோம்.

மேலும், Color Psychology பற்றியும், அதை திரைப்படங்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதையும், வெளிப்புற படப்பிடிப்பில், சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்வது எப்படி என்பதையும் பார்த்தோம்.

நிறைவாக, கலந்துக்கொண்டவர்களுக்கு, Image Workshop & Panasonic சார்பாக சான்றிதழ்களை வழங்கினோம். நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது.

இந்நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்த Panasonic (Lumix GH5) நிறுவனத்திற்கும், திரு.திலிப் மற்றும் திரு.முரளி அவர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்புற நடத்த உதவிய தமிழ் ஸ்டியோ அருண், படிமம் மாணவர்கள் மற்றும் கலந்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.

- விஜய் ஆம்ஸ்ட்ராங் / ஞானம் சுப்பரமணியன்





















































































































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,