இந்தக் கட்டுரையை எழுதவேண்டியது எனக்கு அவசியமானதா என்று தெரியவில்லை, ஆயினும் சில சமயங்களில் நமக்குத் தெரிந்ததை வெளிப்படையாக சொல்ல வேண்டியதும் கூட ‘அறம்’ தான் என்ற அடிப்படையில், சிலவற்றை பேச வேண்டியதிருக்கிறது. மெட்ராஸ் திரைப்படத்தின் கதைக்கு உரிமையாளர் யார் என்ற விவாதம், இப்போது கோபி நயினாரின் ‘அறம்’ வெற்றிக்குப் பின் துவங்கி இருக்கிறது. அத்தகைய விவாதம் இப்போது அவசியமா என்ற கேள்வி ஒருபுறமும், அத்தகைய விவாதத்தின் மூலம், நம் சமூகம் எதை நிறுவ முயல்கிறது என்ற கேள்வி மறுபுறமும் தொங்கி நிற்கிறது. நீண்ட காலமாக நடந்துவரும் அல்லது அப்படிச் சொல்லப்படும் கதைத் திருட்டு என்ற குற்றச்சாட்டை, இதுகாலம் வரை நம் சமூகம் எப்படி அணுகி இருக்கிறது என்பதைப்பார்த்தால்.. அதுவொன்றும் அத்தகைய உவப்பானதில்லை. பெரும்பாலும், அத்தகைய குற்றச்சாட்டை சாட்டியது யார், சாட்டப்பட்டவர் யார் என்பதன் அடிப்படையில்தான் அக்குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், குற்றம் சாட்டியவருக்கு பெரிதாயொரு நன்மையும் விளைந்ததில்லை இதுவரை. அக்குற்றச்சாட்டில் ‘சந்தேகத்தின் பலன்’ பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவ...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!