வெர்சுவல் ரியாலிட்டி (VR) தொழில்நுட்பம் அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது என்று தோன்றுகிறது. இதுவரை, VR நுட்பத்திற்கு சில தடங்கல்கள் இருந்தன. இவைதான் இத்தொழில்நுட்பம் ஒரு யூசர் ஃபிரண்ட்லியாக (User Friedly) மாறாமலிருந்ததற்கு காரணங்கள். அதாவது பயன்படுத்த இலகுவாக இல்லாமை. அவை Price,Wires & Performance ஆனால், இதுநாள் வரை மெத்தனமாக இருந்த அதன் நுட்பம் மற்றும் தாக்கம் இனி வேகமெடுக்கும் என்று நம்பலாம். அதற்கான காரணங்கள் மூன்று. 1. New Headsets Oculus Go - என்னும் புதிய VR head set. இதுவரை, VR-ஐப் பார்க்க, VR ஹெட் செட் மற்றும் தொலைபேசு அல்லது கணினி தேவைப்பட்டது. இனி அது தேவையில்லை. அப்படியே வீடியோவை பார்க்கவல்ல 'standalone VR headset' இது. விலையும் குறைவுதான். 200 அமெரிக்க டாலர். https://www.oculus.com/go/ Vive Focus - HTC நிறுவனத்தின் 'standalone VR headset'இது. இதன் தனித்துவம் ‘inside out’ tracking என்னும் நுட்பம். அதாவது, இதை தலையில் மாட்டிக்கொண்டு, உடலை அசைத்தும், நகர்ந்தும கண்ணுக்கு முன்னே விரிந்திருக்கும் விர்ஷூவல் உலகத்தோடு உறவாடல...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!