முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

VR in 2018 – The New Wave
வெர்சுவல் ரியாலிட்டி (VR) தொழில்நுட்பம் அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது என்று தோன்றுகிறது.

இதுவரை, VR நுட்பத்திற்கு சில தடங்கல்கள் இருந்தன. இவைதான் இத்தொழில்நுட்பம் ஒரு யூசர் ஃபிரண்ட்லியாக (User Friedly) மாறாமலிருந்ததற்கு காரணங்கள். அதாவது பயன்படுத்த இலகுவாக இல்லாமை. அவை

Price,Wires & Performance


ஆனால், இதுநாள் வரை மெத்தனமாக இருந்த அதன் நுட்பம் மற்றும் தாக்கம் இனி வேகமெடுக்கும் என்று நம்பலாம். அதற்கான காரணங்கள் மூன்று.


1. New Headsets 


Oculus Go - என்னும் புதிய VR head set. இதுவரை, VR-ஐப் பார்க்க, VR ஹெட் செட் மற்றும் தொலைபேசு அல்லது கணினி தேவைப்பட்டது. இனி அது தேவையில்லை. அப்படியே வீடியோவை பார்க்கவல்ல 'standalone VR headset' இது. விலையும் குறைவுதான். 200 அமெரிக்க டாலர்.

https://www.oculus.com/go/


Vive Focus - HTC நிறுவனத்தின் 'standalone VR headset'இது. இதன் தனித்துவம் ‘inside out’ tracking என்னும் நுட்பம். அதாவது, இதை தலையில் மாட்டிக்கொண்டு, உடலை அசைத்தும், நகர்ந்தும கண்ணுக்கு முன்னே விரிந்திருக்கும் விர்ஷூவல் உலகத்தோடு உறவாடலாம். (allowing you to walk around interactive VR experiences). VR உலகத்தின் அடுத்த கட்டம் இது. இதன் விலை கொஞ்சம் அதிகம். 600 அமெரிக்க டாலர்.

https://www.vive.com/cn/product/vive-focus-en/


Pimax 8k - தற்போதைய VR வீடியோக்களில் இருக்கும் குறைகளில் ஒன்று, ‘I can see the pixels of the screen’. ஆமாம், வீடியோக்களில் பிக்சல்ஸ் தெரியும். காரணம், அதன் 360° வீடியோதான் 4K-வில் இருக்கும். நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த குறிப்பிட்ட ஃப்ரேம் குறைவான ரெசுலூஷன் கொண்டதாகத்தான் இருக்கும். இக்குறையைக் கலைய வேண்டுமென்றால், அதிக அளவில் மெகா ஃபிக்சல்கள் கொண்ட வீடியோக்கள் தேவை. அதற்குத்தான், Pimax 8k என்னும் புதிய ஹெட் செட் வந்திருக்கிறது. ஒரு கண்ணுக்கு 4K என்னும் அளவில் அதாவது 3840  pixels per eye. தற்போது இருக்கும் Oculus Rift இரண்டு கண்ணுக்கும் சேர்த்து 2160 pixels தான் கொடுக்கிறது என்றால், வித்தியாசத்தைப் புரிந்துக்கொள்ளுங்கள். இதனை கணினியுடன் இணைத்துதான் பயன்படுத்த வேண்டும். சக்தி வாய்ந்த கணினி தேவைப்படும்.

https://www.pimaxvr.com/en/


2. Ready Player One


VR உலகத்தை மையப்படுத்தி அண்மையில் 'Ready Player One' என்னும் அற்புதமான திரைப்படம் வெளியாயிற்று. இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருந்த இத்திரைப்படம், விர்ஷூவல் ரியாலிட்டியின் எதிர்காலத்தை கோடிட்டு காட்டி இருக்கிறது. எதிர்காலத்தில் நடப்பதாக காட்டப்படும் இதன் கதை அம்சம், VR நுட்பத்தின் எதிர்கால சாத்தியங்கள் எத்தகைய தாக்கத்தை, மனிதக்கூட்டத்திற்கு ஏற்படுத்தும் என்பதை நம் கண் முன்னே விரிக்கிறது. இதுவரை படம் பார்க்காதவர்கள், தவற விடாமல் பார்த்துவிடுங்கள்.
VR என்னும் தொழில்நுட்பத்தின் பாய்ச்சலை இத்திரைப்படம் இன்னும் வேகமெடுக்க செய்யும் என்று தோன்றுகிறது. வருங்காலத்தில் அத்தனை பேரும் விர்ஷூவல் உலகத்தின் நடமாடிக் கொண்டிருக்கப்போகிறோம். இப்போது Facebook-இல் இருப்பது போல.


3. Cinematic VR


சினிமேட்டிக் VR என்னும் 360° வீடியோக்கள் இனி அதிகரிக்கும் என்று சொல்லுகிறார்கள். அதாவது 360° வீடியோக்களைப் பயன்படுத்தி கதை சொல்லுவது. ஆல்ரெடி இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கதை சொல்லுவது துவங்கிவிட்டது. வருங்காலத்தில் அது இன்னும் அதிகரிக்க கூடும் என்கிறார்கள். தற்போதை Full HD வீடியோவின் Aspect ratio 16:9, நம்முடைய திரைப்படங்களின் ரேஷியோ 1:2.35.. இந்த 360° வீடியோக்களின் ratio 75:25 என்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. Oculus Mobile platform மற்றும் Vive போன்ற நிறுவனங்கள் அதற்கான வசதிகளை ஏற்படுத்த துவங்கி விட்டன.

வருங்காலத்தில் 75:25 ரேஷியோவில் படங்களைப் பார்க்கப்போகிறோம். அதன் தாக்கம் எப்படி இருக்க போகிறது என்பதை நினைத்துப்பாருங்கள்.

விர்ஷூவல் உலகத்தில் உறவாட தயாராகிக்கொள்ளுங்கள் நண்பர்களே..!Thanks:visualise.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன