முதலிலேயே சொல்லி விடுகிறேன். பா.இரஞ்சித் நான் நேசிக்கும் ஒரு இயக்குநர். மகத்தான கலைஞன். இம்மதிப்பு அவருடைய செயல்பாடு மற்றும் கலையின் வாயிலாகவே வந்தது. காலா.. அக்மார்க் பா.இரஞ்சித் படம். இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு திரைப்படமென்பது ஒரு அரசியல் செயல்பாடு. கலை, அழகுணர்ச்சி, வணிக வெற்றி என எல்லாவற்றையும் தாண்டி, அவர் பேசும் அரசியலை முன்னிறுத்தும் ஒரு கருவி அல்லது ஊடகம். எளிய மனிதர்களின் வாழ்வியலை, அரசியலை, போராட்டத்தை, சவால்களை பேசுவதே அவரின் நோக்கம். காலாவும் அப்படியே. கதை, திரைக்கதை, வசனம், பாத்திரப்படைப்பு, நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என ஒரு திரைப்படத்தைப்பற்றி பேசுவதைப்போல, ரஞ்சித்தின் திரைப்படத்தை பேச வேண்டியதிருக்காது எப்போதும். காரணம், அவருடைய படங்களில் நாம் பொருட்படுத்த வேண்டியது, அது பேசும் அரசியலைத்தான். அது பதிவுசெய்யும் வாழ்வியலைத்தான். அதைத்தான் இரஞ்சித்தும் விரும்புவார். அவ்வகையில், காலாவில், தான் பேச விரும்பிய அரசியலை, கச்சிதமாக அல்லது விஸ்தாரமாக இரஞ்சித் பேச முயன்றிருக்கிறார். அது என்னவென்பதை படம் பார்க்கும் ஒவ்வொருத்தரும் உணர்ந்துக்கொள்ள முடியும...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!