CINEMATIC WEDDING WORKSHOP - CHENNAI நம் வாழ்வில் நிகழும் எல்லா சம்பவங்களிலும் ஒரு கதை இருக்கிறது. பிற்காலங்களில் அதை நினைவுகூர, அதிலிருக்கும் உணர்ச்சிகளே முதன்மையாக இருக்கின்றன. திருமணம் என்பது, நம் வாழ்வின் மிக முக்கியமான ஒரு தருணம். அதனை ஒட்டி நிகழும் உணர்ச்சி குவியல்கள் என்றென்றைக்குமானவை. அதனைக் காலம் கடந்தும் நினைவுகூரவே திருமண விடியோக்கள், புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. வழக்கமான திருமண விடியோக்கள், அந்நிகழ்வை பதிவுசெய்கின்றன. இது இந்நேரத்தில் நடந்தது, இது இப்படி நடந்தது.. அவ்வளவுதான். வெறும் ஆவணம் அது. அதிஷ்டமிருப்பின் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நெகிழ்ச்சிகள் பதிந்து கிடக்கலாம். காலம் மாறுகிறது. எல்லாவற்றிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. திருமண வீடியோவிலும் அந்த மாற்றம் அவசியமாகிறது. அங்கேதான் இந்த ‘ சினிமேட்டிக் வெட்டிங்’ வருகிறது. அது வெறுமனே ஒரு ஆவணப்பதிவாக இல்லாமல், ஒரு திரைப்படம் போல ஒரு கதை சொல்ல முயலுகிறது. அது அவரவரின் உண்மைக்கதை! அறிமுகம், துவக்கம், முடிவு என ஒரு கதைச்சொல்லலின் சுவாரசியத்தைக் கொண்டிருக்கிறது....
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!