CINEMATIC WEDDING WORKSHOP - CHENNAI
நம் வாழ்வில் நிகழும் எல்லா சம்பவங்களிலும் ஒரு கதை இருக்கிறது. பிற்காலங்களில் அதை நினைவுகூர, அதிலிருக்கும் உணர்ச்சிகளே முதன்மையாக இருக்கின்றன.
திருமணம் என்பது, நம் வாழ்வின் மிக முக்கியமான ஒரு தருணம். அதனை ஒட்டி நிகழும் உணர்ச்சி குவியல்கள் என்றென்றைக்குமானவை. அதனைக் காலம் கடந்தும் நினைவுகூரவே திருமண விடியோக்கள், புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
வழக்கமான திருமண விடியோக்கள், அந்நிகழ்வை பதிவுசெய்கின்றன. இது இந்நேரத்தில் நடந்தது, இது இப்படி நடந்தது.. அவ்வளவுதான். வெறும் ஆவணம் அது. அதிஷ்டமிருப்பின் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நெகிழ்ச்சிகள் பதிந்து கிடக்கலாம்.
காலம் மாறுகிறது. எல்லாவற்றிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. திருமண வீடியோவிலும் அந்த மாற்றம் அவசியமாகிறது. அங்கேதான் இந்த ‘ சினிமேட்டிக் வெட்டிங்’ வருகிறது. அது வெறுமனே ஒரு ஆவணப்பதிவாக இல்லாமல், ஒரு திரைப்படம் போல ஒரு கதை சொல்ல முயலுகிறது. அது அவரவரின் உண்மைக்கதை! அறிமுகம், துவக்கம், முடிவு என ஒரு கதைச்சொல்லலின் சுவாரசியத்தைக் கொண்டிருக்கிறது.
இது ஒரு கலை. இதற்குப் பின்னே தொழில்நுட்பமும் இருக்கிறது. ஒரு திரைப்படம் போல, பல்வேறு நுட்பங்களைப் பின்பற்ற வேண்டியதிருக்கிறது. அந்த நுட்பங்களின் வழி நீங்கள் ஒரு திருமணப்பதிவை முற்றிலுமாக மாற்றியமைத்துவிட முடியும்.
இந்த பயிற்சிவகுப்பு அதற்காகத்தான்.
அந்த நுட்பங்கள் யாவை.. அவற்றை பயன்படுத்துவது எப்படி..? என்பதுதான் இப்பயிற்சிப்பட்டறையின் நோக்கம்.
BREAK DOWN THE SCIENCE OF MAKING ART -
கலைக்குப் பின்னிருக்கும் அறிவியலை அறிவோம்!
SCRIPT
EQUIPMENT
SHOOTING
SOUND
DATA MANAGEMENT
EDITING
MUSIC
COLOR
STORYTELLING
Fee: Rs.1999/-
கட்டணம்: ரூ.1999/-
முன் பதிவு செய்திடுங்கள்
To Register
CALL:
+91 98406 32922
+91 99200 29901
கருத்துகள்
கருத்துரையிடுக