புகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி. புகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது. திரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது. லைட் மீட்டரின் அடிப்படை: நாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO)...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!