திரைப்பட ஆக்கத்தில், ஒரு காட்சியை பல்வேறு ஷாட்டுகளாக பிரித்துதான் படமாக்குகிறோம். அதில் ஒவ்வொரு ஷாட்டுக்கும் வெவ்வேறான லென்ஸை பயன்படுத்துகிறோம் என்பதும் நாம் அறிந்ததுதான். குறிப்பிட்ட ஷாட்டுக்கு எந்த லென்ஸை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்ய.. அதாவது, எந்த Focal Lenght lens-ஐப் பயன்படுத்தலாம் என்பதை, கேமராவையும் லென்ஸையும் கொண்டு முடிவு செய்வதற்கு முன்பாக, இந்த Director’s View Finder என்னும் எளிய கருவியைக்கொண்டு முடிவு செய்யலாம்.
நாம் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் Aspect Ratio -வை அமைத்து விட்டு(1:2.35 or 16:9), கேமராவை வைக்க விரும்பும் இடத்திலிருந்து, இக்கருவியின் மூலம் பார்த்து, அதை ஸூம் லென்ஸைப் போன்று முன்னும் பின்னும் மாற்றி அமைத்து, நமக்கு தேவையான லென்ஸ் எது என்பதை முடிவு செய்யலாம். மேலும், குறிப்பிட்ட கோணத்தை முடிவு செய்யவும் இக்கருவி உதவும்.
வெறும் கண்களால் பார்ப்பதை விட, இக்கருவியின் மூலம் பார்க்கும்போது, கேமராவில் லென்ஸைப் பொருத்தி பார்ப்பது போன்று, நமக்கு தேவையான பரப்பளவை (Frame) பார்க்கலாம். இதன் மூலம், நமக்கு தேவையான லென்ஸ் எது என்பதை, இக்கருவின் மேல் பகுதியில் குறிக்கப்பட்டிருக்கும் எண்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். எளிய கருவி.. மிக பயனுள்ளது.
இம்மாதம் (03.02.19) அன்று நடந்த Image Workshop இன் 'Lens Basics' பயிற்சிப்பட்டறையில், இக்கருவியைப்பற்றி பார்த்தோம். கலந்துக்கொண்டவர்கள் அதை பயன்படுத்தியும் பார்த்தனர்.
இயக்குநர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் பயன்படும்.
இதில் பல்வேறு வகை இருக்கிறது..
சிறியது… அப்படியே பயன்படுத்தலாம். இதிலிருந்துக்கும் குறை, Depth of Field-யை கணிக்க முடியாது.
பெரியது.. நாம் பயன்படுத்து, லென்ஸை இதில் பொறுத்திதான் பார்க்க வேண்டும். ஒரு லென்ஸின் மூலம் பார்த்தால் என்ன Depth of Field தெரியுமோ அதே அப்படியே பார்க்கலாம். விலையும் அதிகம்.
Phone App - பயன்படுத்தி பார்க்கும் மாடல்
Now Sigma fp has a good director's viewfinder. Do give it a shot. You will love it.
பதிலளிநீக்குHappy New Year
பதிலளிநீக்குஅருமை
www.nattumarunthu.com
nattu marunthu kadai online
nattu marunthu online