நேற்று, BRIIC மாணவர்களுடன், பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படத்தை அவரோடு சேர்ந்து, அகண்டத்திரையில் பார்த்தோம். எளிமையான காதல் கதை. காதல் கதைகளுக்கே உரிய பரவசமும், துயரமும் நிரம்பியக்கதை. 1986-இல் வெளியானத்திரைப்படம், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நம்மைப் பாதிக்கிறது. படம் துவங்கியதிலிருந்து இறுதி வரை கட்டிப்போடுகிறது. எனில், அதன் செய்நேர்த்தியையும், கலைத்தன்மையையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. தன் திரைப்படத்தின் மீது ஒரு இயக்குநருக்கு இருக்க வேண்டிய ஆளூமையை இத்திரைப்படம் நன்கு உணர்த்தியது. திரைப்பட இயக்கம் என்பது என்ன..? ஒரு கதையை, அதன் சுவாரசியம் குறையாமல், உணர்வுப்பூர்வமாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பது தானே..!? அதை மிகச் சிறப்பாக பாரதிராஜா செய்திருக்கிறார் என்பதும், அவர் ஏன் தமிழின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்பதையும் இத்திரைப்படம் பார்க்கப் புரிந்துக்கொள்ள முடியும். படம் பார்த்தவர்கள் பலருக்கும் அது புரிந்திருக்கும். பார்க்காத நண்பர்களையும், ஏற்கனவே பார்த்த நண்பர்களையும் இத்திரைப்படத்தை (மீண்டும்) பார்க்க பரிந்த...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!