‘ அவர்களுக்கு நாம் என்னவெல்லாம் செய்தோம் என்பதை அவர்கள் ஒருபோதும் அறிவதில்லை … அல்லது நினைவில் கொள்வதில்லை ’ பிறந்ததிலிருந்து எத்தனை மனிதர்களை சந்தித்திருப்போம் , எத்தனை மனிதர்களை கடந்து வந்திருப்போம் . அம்மா , அப்பா , அண்ணன் , அக்கா , தங்கை , தம்பி என்ற இரத்த உறவுகளுக்கு அப்பால் , மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த மருத்துவர் , ஆயாம்மா , நர்ஸ் என துவங்கி … பல்வேறு உயிர்களை , மனங்களை கடந்து வந்திருக்கிறோம் . பிற்காலங்களில் அக்கம் பக்கத்து வீடுகளில் , தெருவில் , பள்ளிக்கூடத்தில் , பயணங்களில் , திரையரங்களில் , கல்லூரியில் , பணியிடத்தில் என தொடரும் நட்புறவுகளில் … மனதை தொட்டுச்சென்றவர்கள் சிலர் , மனதில் தங்கிச்சென்றவர்கள் சிலர் , மனதை கடந்து சென்றவர்கள் சிலர் … இல்லையா ? ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்த உறவு , நட்பு பிறகு இல்லாமல் போகிறது . கறைந்து காணாமல் போகும் மேகத்தைப்போல … உறவுகளை தள்ளி வைப்போம் . அது பல்வேறு உளவியல் , வாழ்வியல் சிக்கல்களோடும் , அந்தரங்க காரணங்களோடும் சம்பந்தப்பட்டது . நட்பைதான் நாம் இங்கே பொதுவெளி
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!