புகைப்படம் , கானொளி ஆகிய இரு காட்சிமொழி ஊடகங்களும் , ஒளியைகொண்டே இயங்குகின்றன . ஓவியருக்கு வண்ணங்கள் , கவிஞருக்கு வார்த்தைகள் எப்படியோ … அப்படித்தான் , ஒரு புகைப்படக்காரனுக்கும் , ஒளிப்பதிவாளனுக்கும் ‘ ஒளி ’ அவசியமாகிறது . வண்ணத்தை , வார்த்தையை முறையாக , நேர்த்தியாக கையாளத்தெரிந்திருக்க வேண்டியது எத்தனை அவசியமோ … அத்தனை அவசியம் ‘ ஒளியை ’ கையாளத்தெரிந்து வைத்திருப்பதும் . ஒளிக்கு நிறம் உண்டு … நாம் அறிவோம் . ஒளிக்கு மனமும் உண்டு … அறிந்ததுண்டா ? ஆம் … ஒளிக்கு மனம் உண்டு . ஒளியின் தன்மை , அதன் அடர்த்தி , அதன் அளவு , அதன் வண்ணம் கொண்டு … உங்கள் மனநிலையை மாற்றி அமைக்கும் வல்லமை ஒளிக்கு உண்டு . இசை எப்படி...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!