நான் நேசிக்கும் , போற்றும் ஆசான்கள் , சக கலைஞர்கள் , தொழில்நுட்பாளர்கள் , அம்மா , துணைவியார் , நண்பர்கள் , தோழர்கள் ஒன்று கூடி எங்கள் விழாவை சிறப்பாக்கிவிட்டீர்கள் . ‘ குறும்படம் எடுப்பது எப்படி ?’ என்ற பயிற்சிப்பட்டறையில் ‘ கசடற ’ குறும்படத்தை எடுத்தோம் . அதன் நோக்கம் பயிற்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கு நேர்த்தியாக ஒரு குறும்படத்தை எப்படி எடுப்பது என்ற பயிற்சியை வழங்குவதுதான் . அதைத்தவிர்த்து வேறெதும் திட்டமில்லை அப்போது . குறும்படம் தயாராகிய போது , அதனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த நண்பர்கள் , படம் சிறப்பாக இருக்கிறது . அது பேசும் ‘ கருப்பொருள் ’ மிக முக்கியமானது , அதனால் குறும்பட விழாக்களுக்கு அனுப்பி வையுங்கள் என்றார்கள் . சில போட்டிகளுக்கு அனுப்பி வைத்தேன் . விருதுகளைப் பெற்றது . அதன் பிறகு எப்படி வெளியிடுவது என்ற குழப்பம் தொடர்ந்துக் கொண்டிருந்தபோது , எழுத்தாளர்கள் , சமூக ஆர்வலர்கள் என்று நான் மதிக்கும் சில ஆளுமைகளுக்கு அனுப்பி வைத்தேன் . அதில் எழுத்தாளர் , இயக்குநர் திரு . ரவிசுப்பிரமணியன் படத்தைக் குறித்...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!