Posts

Showing posts from November, 2015

Cinematic Lighting in Wedding Photography - Trichy - 23.04.19

Image
கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் நாடு முழுவதும் பல்வேறு பயிற்சிப்பட்டறையை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு துறைச்சார்ந்து நடத்தி வருகிறேன். அவ்வகையில் வரும் செவ்வாய் கிழமை (23/04/19) அன்று திருச்சியில் 'சினிமேட்டிக் லைட்டிங் இன் வெட்டிங் போட்டோகிராபி’ என்ற தலைப்பில் 'திருச்சி நிக்கான் டெக்னிக்கல் கிளப்' ஒரு பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்திருக்கிறது.

‘Lighting’ என்பது புகைப்படக்கலையின் ஆதாரமான ஒன்று. ஒளியை எப்படி பயன்படுத்துவது என்பதும், அதன் பல்வேறு கூறுகளைப்பற்றியும் இப்பயிற்சி வகுப்பில் காணப்போகிறோம். ஒளியின் தன்மை, ஒளியின் அளவு, ஒளியின் வண்ணம், ஒளியின் அடர்த்து போன்றவற்றைப் பற்றியும், ஒரு தரமான புகைப்படத்திற்கு ஒளியின் அளவைப்போலவே ஒளியின் தரம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் பார்க்கப்போகிறோம்.

இப்பயிற்சி வகுப்பில்..

1. ஒளியமைப்பின் அடிப்படையான Three Point Lighting மற்றும் அதன் பயன்பாடு.

2. ஒரே ஒரு விளக்கை (Light) வைத்துக்கொண்டு எப்படி பல்வேறு வகையில் ஒளியமைப்பது என்பதையும், அதனைப் பயன்படுத்தி எப்படி சிறப்பான புகைப்படத்தை எடுப்பது.

3. ஒளியை சிறப்பாக பயன்படுத்துவது எ…

இசையும் இசை நிமித்தமும்: இசை கேட்டல்

Image
பொதுவாக இசைகேட்பதில் இரண்டு விசயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று எதைக் கேட்கிறோம் என்பது, மற்றொன்று எப்படிக் கேட்கிறோம் என்பது. 
எதைக் கேட்கிறோம் என்பது அவரவர் ரசனை சார்ந்தது, மனம் சார்ந்தது. அல்லது அவரவர் அனுபவம், வாசிப்பு, பயணம், அறிமுகப்படுத்திக்கொள்ளல், திறந்த நிலை, கடந்தவந்த வாழ்வைப் பொருத்தது. 
எப்படிக் கேட்கிறோம் என்பது முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்தது. ஆமாம்.. தொழில்நுட்பம் சார்ந்ததுதான். கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமான ஸ்டேட்மெண்டாகத் தெரிகிறதா..? விளக்குகிறேன். 
ஒரு நல்ல இசையை முழுமையாக ருசிக்க முதன்மையானது ஒரு நல்ல ‘ஒலிபெருக்கி’ (Speakers). Hi-Fi Music Systems, Home Theatre System, Portable Music system, MP3 Docking Systems, CD/Radio Cassette Players, iPod/Non-iPod Music system என எதுவாகவும் இருக்கட்டும். அதிலிருந்து வெளிப்படும் இசையை தரத்தோடு வழங்கக்கூடியதாக அதன் Speakers இருக்க வேண்டும். Speakers என்று பொதுவாக அழைத்தாலும், அதில் Driver, Tweeter, Satellite, Subwoofer என பல உள்குத்துகள் இருக்கின்றன. முன்னதாக நமக்குத் தெரியவேண்டியதெல்லாம் நல்ல Speakers ஒன்று மிக அவசியம்…

ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை:

Image
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் ஸ்டியோ அருண் கூட பலமுறை கேட்டு விட்டார், ஒளிப்பதிவு குறித்தான பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்துங்கள் என்று. சில காரணங்களால் அதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தோம். ஆனால், இம்மாதம் (Nov) 7 மற்றும் 8 - ஆம் தேதிகளில் அதை நடத்துவதற்கான வாய்ப்பும், நேரமும் கூடி வந்தது. நடத்தி விட்டோம்!

பலர் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தபோதும் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. தீபாவளி ஒருபுறம், மழை மற்றொரு புறம் என தடைகளுக்கும் குறைவில்லை. ஆயினும் நாற்பத்தி நான்கு பேர் கலந்துகொண்டார்கள். கலந்துகொண்டவர்களில், வெவ்வேறு துறை சார்ந்தவர்களும் இருந்தது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. விஷுவல் கம்யுனிகேஷன் படிப்பவர்கள், இன்ஜினியரிங் படிப்பவர்கள், கணினித் துறையில் வேலை செய்பவர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குனர்கள் மட்டுமல்லாது ஆட்டோ ஓட்டுனர், தச்சு வேலை செய்பவர், கல்லூரி ஆசிரியர் என பலரும் ஆர்வமாக கலந்துகொண்டார்கள். அமெரிக்காவில் கணினி வேலை செய்பவரும், பெங்களூரில் இருந்தும், இலங்கையிலிருந்தும்…