முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்ந்தது இனிது… | 01

இப்போதைய சூழல் , வாழ்வின் மீதான எதிர்பார்ப்பு , நம்பிக்கை , பிடிமானங்கள் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது .  இந்தக்காதில் வாங்கி , அந்தக்காதில் வெளியே விட்டுக்கொண்டு திரிந்து தத்துவங்கள் எல்லாம் உண்மையாகிவிடும் சூழலுக்கு வந்துவிட்டோம் .  ‘ காயமே இது பொய்யடா … காற்றடைத்த பையடா ..!’ என்பது எத்தனை நிஜம் …!?  நம்முடைய பலூன் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் . ‘ வெறும் காற்று … வெறும் மண் ’ என்றாகிட தயாராகி விட வேண்டியதுதான் . இதை உணரும் போது , மனம் வெறுமையில் நிற்கிறது . எதிர்கால வாழ்வு கனவாகிவிடும் சூழலில் , கடந்த கால வாழ்வு மட்டுமே கையிலிருக்கிறது . அதை வைத்துக்கொண்டு , உருட்டி … உருட்டி விளையாடுவது தவிர வேறென்ன செய்வது இப்போது ..! என் வாழ்வில் , என்னை பாதித்த , நடந்த , கடந்து , பாதையைத் திரும்பிப்பார்க்க முயல்கிறேன் . வாழ்வு என்னவெல்லாம் கொடுத்தது , எதையெல்லாம் உணர்த்தியது என்பதே சாரம் .  *  கடவுள் :  அப்போது ஏழு வயது இருக்குமென்று நினைக்கிறேன் . தாத்தா , பாட்டி , அம்மா , சித்திகள் , மாமாக்கள் எல்லோரும்

How to use Small LED Lights to shoot Portrait Photography | Lighting | Tamil

கிராமத்தில் சிறுவர்களை சில புகைப்படங்கள் எடுத்தேன். Godox M1 and LC500R ஆகிய இரு சிறிய LED விளக்குகளைப் பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்க ஏதுவாகிருக்கிறதா என்பதை பரிச்சித்துப் பார்ப்பது நோக்கம். மாலை நேரம், சூரியன் தாழ்ந்த பிறகு, இருட்டு வருவதற்கு முன்பாக இருக்கும் 'Twilight' நேரத்தை பயன்படுத்திக்கொண்டேன். அந்நேரத்து ஒளி எனக்கு ரொம்பவே பிடித்தது. பெரும்பாலும் அந்நேரங்களில், திறந்த வானம் பார்க்க கூடிய வகையில், மொட்டை மாடி, பால்கனி, பூங்கா, புல்வெளி, கடற்கரை, மலைமுகடு ஆகிய இடங்களில் அமர்ந்திருக்க விரும்புவேன். அந்நேரத்து பயணமும் ரொம்பவே பிடிக்கும். புகைப்படங்கள் எடுக்கவும், காட்சிகளை படமாக்கவும் என் ரசனைக்கு உகந்த நேரம் அது. பரவசமான ஒரு மந்திர கணங்கள். சூழலில் அதிக ஒளி இல்லாததனால், குறைந்த அளவு ஒளியைக் கொடுக்கக்கூடிய சிறிய விளக்குகள் போதுமானது. இவ்விளக்குகள் பல்வேறு வண்ணங்களை ஏற்படுத்த வல்லன, அவற்றைப்பயன்படுத்தி எடுத்த சில புகைப்படங்கள் இங்கே. இதனைப்பற்றிய Behind the Scene கானொளிகளை என்னுடைய யூடிப் சேனில் கொண்டுவருகிறேன். முதல் பாகம் கானொளியைக்காண... https://youtu.be/w37rrdCVNUs

‘Nayattu’

  ‘Nayattu’ ( மலையாளம் ) - வேட்டை என்று அர்த்தம்   ஆம் , படம் அப்படித்தான் இருக்கிறது .  மெதுவாக , கதாப்பாத்திரங்களையும் , சூழலையும் அறிமுகப்படுத்திக்கொண்டு துவங்கும் கதை , சட்டென்று ஒரு சிக்கலுக்குள் நுழைகிறது . அதன் பின் நிகழும் துரத்தல் கிளைமாக்ஸில்தான் சென்று முடிகிறது .  பொதுவாக கதை சொல்லுவதில் இரண்டும் வகை இருக்கிறது .  - சாதாரன மனிதர்கள் , அசாதரன சூழலில் , பிரச்சனையில் மாட்டிக்கொள்வது . கதாப்பாத்திரங்களை வடிவமைத்துவிட்டு , அவர்களுக்கு நிகழும் சம்பவங்களை விவரிப்பது . ( ரோஜா , பொல்லாதவன் ) - அசாதாரன சம்பவம் அல்லது சூழலே பிரதானம் , அதை விவரிப்பதற்கான கதாப்பாத்திரங்களை படைப்பது . ( அறம் , கைதி ) இப்படம் , சாதாரன மனிதர்கள் , அசாதாரன சூழலில் , சிக்கலில் மாட்டிக்கொள்வது பற்றியக்கதை .  அச்சிக்கலை அதிகரிப்பது , அரசியலும் அதிகாரமும் . இப்படம் பேசும் அரசியல் , விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது . தலித்துகளையும் , கிருத்துவர்களையும் , தமிழர்களையும் சிறுமைப்படுத்துகிறது என்று .  என்பார்வையில் …. சாதிகள் அரசியல்வயமாக்கப்பட்ட சூழலில

நானும்… கால இயந்திரமும்…!

  சில நாட்களுக்கு முன்பு ‘ டிவிட்டரில் ’, கால இயந்திரம் (Time Machine) கிடைத்தால் , நீங்கள் எந்த காலத்திற்கு ( முன் ) செல்ல விரும்புவீர்கள் என்பது போன்ற ஒரு உரையாடல் ஓடிக்கொண்டிருந்தது .  எனக்கு அதை படித்தவுடன் … ‘ ராஜாராஜன் தஞ்சை பெரியக்கோவிலை கட்டியபோது , காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது , அன்னைகிளி திரைப்படம் வெளியானபோது , பதினாறு வயதினிலே வெளியான போது ’ என பல்வேறு சந்தர்ப்பங்கள் தோன்றியது . ஆனாலும் , இதிலெல்லாம் ஒரு அந்நியத்தனம் இருப்பதாகவே பட்டது . பிறகு அதைக்குறித்தான சிந்தனை இல்லா சூழலில் , அம்மாவோடு பேசிக்கொண்டிருந்த போது … ஒன்று தோன்றியது . நான் செல்ல விரும்பும் காலம் எது வென்று தெரிந்துவிட்டது .  ஆம் … நான் அங்கேதான் செல்ல விரும்புகிறேன் . மீண்டும் அந்நாட்களில் வாழ விரும்புகிறேன் .  இருபத்தைந்து , முப்பது வருடங்களுக்கு பின்னே செல்ல பிரியப்படுகிறேன் . இடம் … எங்கள் ஊர்தான் .  காரணம் , என் சிறுவயதில் நான் சந்தித்த பல்வேறு முதியவர்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் . என் தந்தையின் வயதை ஒத்த , அவருக்கும்