‘Nayattu’ (மலையாளம்) - வேட்டை என்று அர்த்தம்
ஆம், படம் அப்படித்தான் இருக்கிறது.
மெதுவாக, கதாப்பாத்திரங்களையும், சூழலையும் அறிமுகப்படுத்திக்கொண்டு துவங்கும் கதை, சட்டென்று ஒரு சிக்கலுக்குள் நுழைகிறது. அதன் பின் நிகழும் துரத்தல் கிளைமாக்ஸில்தான் சென்று முடிகிறது.
பொதுவாக கதை சொல்லுவதில் இரண்டும் வகை இருக்கிறது.
- சாதாரன மனிதர்கள், அசாதரன சூழலில், பிரச்சனையில் மாட்டிக்கொள்வது. கதாப்பாத்திரங்களை வடிவமைத்துவிட்டு, அவர்களுக்கு நிகழும் சம்பவங்களை விவரிப்பது. (ரோஜா, பொல்லாதவன்)
- அசாதாரன சம்பவம் அல்லது சூழலே பிரதானம், அதை விவரிப்பதற்கான கதாப்பாத்திரங்களை படைப்பது. (அறம், கைதி )
இப்படம், சாதாரன மனிதர்கள், அசாதாரன சூழலில், சிக்கலில் மாட்டிக்கொள்வது பற்றியக்கதை.
அச்சிக்கலை அதிகரிப்பது, அரசியலும் அதிகாரமும். இப்படம் பேசும் அரசியல், விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தலித்துகளையும், கிருத்துவர்களையும், தமிழர்களையும் சிறுமைப்படுத்துகிறது என்று.
என்பார்வையில்….
சாதிகள் அரசியல்வயமாக்கப்பட்ட சூழலில், அதிகாரம் அதனை எப்படி எல்லாம் பயன்படுத்திக்கொள்கிறது, எதிர்கொள்கிறது என்பதையும், அரசியல் தொடர்புகள் கொண்ட சாதியவாதிகள், அதிகாரத்தை எப்படியெல்லாம் வலைக்கிறார்கள் என்பதையும் தான் இப்படம் பேசுகிறது என நினைக்கிறேன். சார்பு நிலை எடுக்காமல் பார்த்தால் அது புரியும்.
ஒரு திரைப்படமா இப்படம் நிகழ்ந்திருக்கும் அட்டகாசங்கள் நிறைவானது. இயல்பான கதாப்பாத்திரங்கள், அதற்கேற்ற நடிகர்கள், அவர்களின் தேர்ந்த நடிப்பு, பரபரப்பான திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என இப்படம் முழுமைப்பெறுகிறது.
தவறவிடக்கூடாத திரைப்படம். Netflix இல் இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக