அம்மா , பாட்டி , அப்பா , தாத்தா , அண்ணன் , மாமா , அத்தை , சின்னம்மா என பிறந்ததிலிருந்து இன்றுவரை … எத்தனை வாத்தியார்களை கடந்து வந்திருக்கிறோம் நாம் …! . உணவு உண்பது , உடை அணிவது , பேசப் பழகுவது என்று தொடங்கி , வாழ்தலுக்கான தேவைகளனைத்தையும் நாம் கற்றுக்கொண்டேதான் வளர்கிறோம் . கற்றல் ஒன்றே நம்மை நிரந்தரமாக்குகிறது . எல்லோரும் நினைப்பது போல , குரு என்பவர் ஒருவரல்ல . வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குரு நம்மை வந்தடைவார் . குரு என்பவருக்கு எப்படி பல மாணவர்களோ … அதேபோல ஒரு மாணவனுக்கு பல குருமார்கள் . வாழ்வின் அப்போதையப் ‘ படிக்கள்ளை ’ கடப்பதற்கு மட்டுமல்ல , தொடர்ந்து படிகளில் ஏறுவது எப்படி என்ற பாடத்தையும் கற்றுத் தருபவரே குருவாகிறார் . கடக்க உதவுபவர்கள் நண்பர்களாகிறார்கள் . பின்வரும் காலங்களில் இருவருமே நம்மோடு பயணிப்பவர்கள் . நண்பர்கள் தோளோடும் … குருமார்கள் மனதோடும் . இருவரும் அன்புக்கும் நன்றிக்கும் உரியவர்கள் . இயற்கையை போல ஒரு ஆசிரியர் உண்டா ..! வானமும் , வனமும் , மலையும் , காடும் , கடலும் கற்றுத்தராத பாடம்
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!