பெங்களூரில் சட்டம் படிக்கப்போன போதும் , ஒளிப்பதிவின் மீதான ஆர்வத்தின் காரணமாக , புகைப்படத்துறையின் நுட்பங்களையும் , கேமராக்களைப்பற்றி அறிந்துக்கொள்ளவும் ‘ கேமரா பழுதுப் பார்க்கும் ’ நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன் என்று முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா . அங்கே பணி செய்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது , அதைப்பற்றி பேசுவதற்கு முன்பாக , ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் குறிப்பிட்ட ஒரு தகவலை , சம்பவத்தைப் பற்றி சொல்ல விரும்புகிறேன் . அதன் தலைப்பு … Connecting Dot ( புள்ளிகளை இணைப்பது அல்லது இணைக்கப்படும் புள்ளிகள் ) ஸ்டீவ் ஜாப் ஆற்றிய ஒரு உரையில் இதனைக் குறிப்பிடுகிறார் . தன் வாழ்வில் , ஏன் எதற்கு என்று தெரியாமலையே , அவர் வைத்த புள்ளிகள் , பிற்காலங்கள் இணைக்கப்பட்ட போது , அதற்கு ஒரு வடிவம் கிடைத்ததைப்பற்றியப் பேச்சு அது . அதாவது , அவருடைய பள்ளிக்காலத்தில் , படிப்பு சரியாக வராமல் போனபோதும் , பொழுதைக் கழிக்க அவர் சென்ற இடம் , அப்போது அப்பள்ளியில் கற்றுக்கொடுக்கப்பட்ட ‘calligraphy’ வகுப்பு . ‘calli
பொதுவாக எவ்வித தொழிநுட்பத்திலும் , service sector- இலும் , குறிப்பாக Software, UI/UX பயன்பாடுகளில் இவ்வார்த்தைகளை நாம் கேட்டு இருக்க முடியும் … ‘Think About Users, Keep It Simple, User-Friendliness and Customer Satisfaction’. இதற்கு பொருள் , உன்னுடைய ‘ பயன்பாட்டாளனை திருப்திப்படுத்து ’ என்பதுதான் . என்னைக்கேட்டால் , அது எல்லாத்துறைக்கும் பொருந்தும் என்றுதான் சொல்வேன் . நீங்கள் எத்தனை உயர்ந்த ஒன்றைப் பற்றிப்பேசினாலும் சரி , படைத்தாளும் சரி , அது அவனுக்கு புரியவேண்டும் , பயன்படவேண்டும் . திரைப்படங்களுக்கும் இது பொருந்தும் , பொருந்தவேண்டும் என்பதுதான் என் விருப்பம் . காரணம் எந்த படைப்பிற்கும் அடிப்படை ‘ நுகர்வோர் ’ தானே ..!? ஏன் ஒரு பார்வையாளன் , திரைப்படங்களை புரிந்துக்கொள்ள ( ஓரளவிற்கு மேல் ) எவ்வித சிரத்தையும் எடுப்பதில்லை என்றால் , குறிப்பிட்ட திரைப்படத்தை அவன் பார்க்க நினைத்த , அவனுடைய ஆதாரமான நோக்கத்திற்கு எதிராக இருப்பதுதான் . அது என்ன ஆதார நோக்கம் ? வேறென்ன ‘ சுவாரசியமாக ’ பொழுதை கழிப்பதுதான் . அது வரலாறாக , வாழ்வியலாக ,