அண்மையில் உலகசினிமா ரசிகனின் 'காட்பாதர்- 1972[ஆங்கிலம்] வன்முறையைக் கொண்டாடுவோம்' என்றப் பதிவால் தூண்டப்பட்டு, மூன்று 'காட்ஃபாதர்' படங்களையும் மீண்டும் ஒருசேரப் பார்த்தேன். அது ஏற்படுத்திய தாக்கமும், அனுபவமும் அதிலிருக்கும் ஒழுக்கமும், செய்நேர்த்தியும் என்னை ஒரு தொழில்நுட்பாளனாக பிரமிக்க வைத்தன. இதன் இயக்குனர் 'ஃபிரான்சிஸ் ஃபோர்டு கொப்பலா'. அந்த மாபெரும் கலைஞனின் ஆற்றல் பல ஆண்டுகள் கடந்தும் புதுமையாக இருக்கிறது. கொப்பலா, அண்மையில் கொடுத்த நேர்காணலின் தமிழாக்கத்தைக் காண, 'வார்த்தைகள்' வலைப்பூவில் 'கொப்பலாவின் பதில்கள்' பதிவுகளைப் படியுங்கள். அந்தப்படத்தைப் பற்றிய சில தகவல்களை, உங்களோடு பகிர்ந்துக்கொள்ள இந்தப் பதிவு. கொண்டாட்டம் மற்றும் மரணம்: காட்ஃபாதர் - மூன்று பாகப் படங்களும், தமக்குள் பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. மூன்று படங்களும் ஏதேனும் ஒரு குடும்ப விழாவில் (கொண்டாட்டத்தில்) துவங்கி, குடும்ப உறுப்பினர் மரணத்தில் முடிகின்றது. முதல் பாகம் 'விட்டோ கோர்லியானின்' (மார்லன் பிராண்டோ - காட்ஃபாதர்) மகள் 'C...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!