வாழ்ந்து வந்த பாதையைப் பதிவு செய்து வைப்பது வருங்காலத்திற்கான வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையே வரலாறுகள் எழுதப்பட்டதற்கான காரணமாக இருந்திருக்க முடியும். ஒரு தேசம், ஒரு இனம் இன்று நிற்கும் இடம் என்பது எவ்வளவு தூரத்தை, பாதையை கடந்து வந்தது என்பதை வரலாறுகள் நினைவுறுத்த வேண்டும். வரலாறு என்பது என்ன? ஆண்ட அரசனையும், மாண்ட மன்னனையும் துதி பாடுவதா? பேரரசையும் பேரிழப்பையும் நினைவில் கொண்டு பெருமூச்செறிவதா? இல்லை.. அது வாழ்ந்த, செழித்த, வீழ்ந்த எளிய மக்களின் பதிவாக இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும். தனித்து வாழ்ந்த மனிதன் குழுவாக இணைந்து வாழத்துவங்கியபோது மொழி, நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என வளர்ச்சியடைந்தான். வளர்ச்சி எப்போதும் இன்னொரு சாராருக்கு ஏக்கம் கொள்ள வைக்கும். ஏக்கம் பகைமையாக மாறும். பகைமை ஆபத்தை விளைவிக்கும். ஆக்கிரமிப்பு, அடிமைமுறை என பல வடிவங்களில் தன் அதிகாரத்தை நிலைநிறுத்தத் தூண்டும். அவ்வழியிலேயே பல இனங்கள் அடிமைப்பட்டுப்போயின. அடிமை கொண்டவன், அடிமைப்பட்டவனின் வாழ்வை மட்டுமல்ல வரலாற்றையும் ஆக்கிரமித்தான். கட்டுக்கதையும், அயோக்கியத்தனமும் உருவெடுத்தன. பொய்...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!