முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Canon EOS C300 - Cinema Camera: புதிய வரவு


அது ஒருநாள் கண்டிப்பாக நடக்கும் என அனைவராலும் நம்பப்பட்டது, எதிர்ப்பார்க்கப்பட்டது. அது இப்போது நடந்து விட்டது. ஆமாம் கேனான் (Canon) எல்லாருடைய எதிர்ப்பார்பையும் மெய்ப்பித்திருக்கிறது.

திரைத்துறையில் ‘ஃபிலிமுக்கு’ (Film) மாற்றாக டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும்.. அது தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில்தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிலையில் கேனான் நிறுவனத்தின் Canon EOS 5D Mark II அறிமுகமாகி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

5D என்பது புகைப்படக் கலைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் அதில் தரமான விடியோவும் எடுக்க முடிந்தது யாரும் எதிர்ப்பார்க்காத கூடுதல் வசதி. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கும் அக்கேமராவை பயன்படுத்தத் துவங்கியது கேனான் நிறுவனமே எதிர்ப்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி. இக்கேமரா திரைத்துறையை மிக வேகமாக டிஜிட்டலை நோக்கி நடைப்போட வைத்திருக்கிறது.

Canon EOS 5D Mark II 

5D போன்ற சிறு கேமராக்களின் வரவும் வெற்றியும் அது தொடர்ந்து நீடித்து நிலைக்கும் என்ற எதிர்கால நம்பிக்கையும், இத்துறையில் பல புதிய தொழில்நுட்ப எதிர்ப்பார்ப்புகளை தோற்றுவித்தது. அதன் தொடர்ச்சியாகப் பல மாற்றங்கள் திரைத்துறையில் நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் திரைத்துறையினர் இதைப் பயன்படுத்தி திரைப்படம் எடுக்கத்துவங்க, மறுபுறம் விடியோக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளில் பெரும் மாற்றங்கள் தெரிந்தன. அதன் தயாரிப்புகளில் பல புதிய கருவிகள் இடம்பெறத்துவங்கி இருக்கின்றன.

Red One, ARRI, Sony, Panasonic போன்ற பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களின் தயாரிப்பில் புதிய, சிறிய வடிவ கேமராக்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. Red One அதன் சார்பாக Epic’ மற்றும் Scarlet போன்ற சிறிய கேமராக்களைக் கொண்டு வந்தது. Alexa என்னும் கேமரா ARRI நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகிருக்கிறது. துணைக்கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் இக்கேமராக்களுக்கு தேவையானக் கருவிகளைத் தயாரிக்கத் துவங்கி விட்டன.

 Epic 

Scarlet

Alexa

5D கேமரா மிக வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு காரணம், அதன் விடியோ தரம் மற்றும் சிறிய உருவ அமைப்பு. இச்சிறிய உருவ வடிவமைப்பு பல வழிகளில் திரைத்துறைனருக்கு உதவுகிறது. பெரிய கேமராக்களை வைக்க முடியாத இடங்களில் இக்கேமராவை வைக்க முடிகிறது. குளிர்ச்சாதனப் பெட்டிக்கு உட்புறமாக, காரில் ஸ்டேரிங்குக்கு கீழாக, அலமாரியில் என தேவைப்படும் இடங்களில் எல்லாம் வைத்து படமெடுக்க முடிவது இதன் பலங்களில் ஒன்று. அப்படி எடுக்கப்பட்ட விடியோவின் தரம் திரைப்படத்திற்கு தேவையான அளவில் இருந்தது மட்டுமல்லாமல் அக்கேமராவின் விலையும் குறைவாக இருந்தது பெரும் வசதி.

ஆனாலும் அக்கேமராவில் சில குறைகள் இருக்கத்தான் செய்தன. குறிப்பாக அதன் வியூ ஃபைண்டர் (View Finder) அமைப்பு. அது நிலையாக பொருத்தப்பட்டிருந்ததும் படமாக்கப்படும் விடியோ பிம்பத்தைப் பார்க்க அதன் LCD டிஸ்பிளேவை (LCD Display) மட்டுமே பயன்படுத்த முடிந்ததும் முக்கியமான குறைகளில் ஒன்று. கேமராவில் இருந்து எடுக்கப்படும் விடியோ அவுட் புட் (Video Output) HDMI மற்றும் AV அவுட்டாக இருக்கிறது. இரண்டு அவுட்டுகளிலிருந்தும் அவுட் எடுக்க கேமராவின் LCD டிஸ்பிளே வேலை செய்யாமல் போவதாலும் LCD டிஸ்பிளே கேமராவோடு நிலையாக பொருத்தப்பட்டிருப்பதனாலும், பயன்பாட்டில் ஒளிப்பதிவாளருக்குச் சில சிரமங்கள் இருக்கின்றன.

Canon EOS C300

5D-இல் மற்றொரு பிரச்சனையும் இருக்கிறது. அது சரியான ஃபோக்கஸ் (Focus)-ஐப் பெறுவதில் இருக்கும் குறைபாடு. இக்கேமராவில் பயன்படுத்தப்படும் லென்சுகள் புகைப்படத்துறைக்கானது, ஆகையால் அவை விடியோவுக்கான ஃபோக்கஸ் தேவைகளை ஈடுசெய்ய முடியாமல் திணறின. விடியோவை சிறப்பான ஃபோக்கஸோடு எடுக்க, லென்சை மாற்ற வேண்டியதாக இருக்கிறது. வழக்கமாக திரைத்துறையில் பயன்படுத்தும் லென்சுகள் PL Mount அமைப்புக் கொண்டது. ஆனால் இக்கேமரா EF Mount அமைப்புக்கொண்டதாக இருக்கிறது. PL Mount லென்சுகளை பயன்படுத்த கேமராவில் சிறப்பு மாற்றங்களைச் செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதாவது EF Mount-ஐ எடுத்துவிட்டு PL Mount-ஐ பொருத்த வேண்டிருக்கிறது. அதற்கு கூடுதல் செலவாகிறது.

இத்தகைய குறைபாடுகளை உள்வாங்கிக் கொண்டு 5D கேமராவின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை கேனான் நிறுவனம் கொண்டுவரும் என்பதும் அக்கேமரா திரைப்படத்துறையை குறிவைத்தே இருக்கும் என்பதும் திரைத்துறையினரால் மட்டுமல்லாது, இத்துறைச்சார்ந்து ஆர்வம் கொண்ட அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. அவ்வார்வத்தைத்தான் அந்நிறுவனம் இப்போது பூர்த்தி செய்திருக்கிறது.


5D கேமராவின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதோடு மட்டுமல்லாது அதன் குறைகளையும் களைந்து புதிய வடிவில் ஒரு கேமராவை அறிமுகப்படுத்தப்போவதாக அந்நிறுவனம் நவம்பர் 3-ஆம் தேதி அறிவித்திருக்கிறது.

அந்தப் புதிய கேமராவிற்கு Canon EOS C300 என்று பெயரிட்டிருக்கிறது.

இக்கேமரா 2012 ஜனவரியில் வியாபாரத்திற்கு வருகிறது. EF Mount அமைப்புக்கொண்ட கேமரா முதலிலும், PL Mount அமைப்புக்கொண்ட கேமரா மார்ச் மாதத்திலும் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன் வியூ ஃபைண்டர்(View Finder) அமைப்பில் மாற்றம் செய்து தேவையான படி அதை திருப்பிக்கொள்ளும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. தேவையான அளவில் விடியோ அவுட்டும், External Video Display-வும் கொடுக்கப்பட்டிருக்கிறது.


Specifications

Standard Definition or High Definition
High Definition
Power Supply (rated)
7.4V DC (battery pack), 8.4V DC (DC-IN)
Recording/Codec
Signal System: NTSC and PAL
Compression: 8 Bit MPEG-2 Long GOP
Color Space: 4:2:2 at 50Mbps recording
Maximum Bit Rate: 50Mbps (CBR)
Canon Log Gamma: Available
File Format: MXF (OP-1a)
Recording Options:
50Mbps (CBR) 4:2:2 422P@HL
1920x1080: 59.94i/29.97p/23.98p; 50i/25p; True 24 (24.00)
1280x720: 59.94i/29.97p/23.98p; 50p/25p; True 24 (24.00)
35Mbps (VBR) 4:2:0 MP@HL
1920x1080: 59.94i/29.97p/23.98p; 50i/25p
1280x720: 59.94p/29.97p/23.98p; 50p/25p
25Mbps (CBR) 4:2:0 MP@H14
1440x1080: 59.94i/29.97p/23.98p; 50i/25p
Audio
Linear PCM; 2-Channel; 16-Bit; 48kHz
Built-in Microphone: None
External Audio Inputs: 2 - XLR inputs (Auto and Manual level settings)
Recording Channel Selection: Two channel recording
XLR Mic Trimming: Available; -12dB, -6 dB, 0dB or +12dB
Recording Level Adjustment Range: - Infinity to +18dB
Phantom Power: Available: +48V
Headphone Adjustment: 16 Settings; Volume is muted at lowest setting
1KHz Tone: Available: -12, -18 or -20 dB
Image Sensor
Sensor Type: CMOS sensor (single-panel), equivalent to Super 35mm
Sensor Size: 24.6 x 13.8mm effective screen size (6.4 x 6.4 micrometer pixel pitch)
Scanning System: Progressive
Number of Sensors: 1
Filter: RGB Primary Color Filter (Bayer Array)
Imaging Processor: DIGIC DV III
Effective Pixels
Approx. 8.29 megapixels (3840 x 2160)
Total Pixels
Approx. 9.84 megapixels (4206 x 2340)
Max. Movie Recording Time
64GB Compact Flash (CF) card
Greater capacity is possible when both are used.
25Mbps: 310 minutes
35Mbps: 225 minutes
50Mbps: 160 minutes
Lens
Interchangeable: EF mount
Focusing System
Manual; Autofocus system not available
Max. Shutter Speed
1/2000 sec
ISO Range
320 to 20,000, 1-stop or 1/3-stop
ND Filter Settings
Mechanical ND filter system with option of clear, 2 stops, 4 stops, and 6 stops
White Balance
Auto, Manual, 2 Custom (2000K - 150,00K in 100K increments), Daylight, Tungsten
Frame Rate
NTSC: 59.94P, 59.94i, 29.97P, 23.98P
PAL: 50P, 50i, 25P
Film: 24P
Minimum Illumination
Full AUTO mode: TBA lux
Manual mode: TBA lux
Illumination Correction
Compensates for each lens' light fall-off. Lens specific data stored in firmware
Genlock Terminal
BNC (input only)
HD/SD-SDI Terminal
BNC (output only), with embedded audio
Timecode Terminals
BNC (input/output), Sync Out (BNC)
Viewfinder
0.52-inch diagonal, color 16:9 rotatable LCD
+2.0 to -5.5 diopter eye adjustment
LCD Screen (Monitor Unit)
4-inch diagonal, 1.23 megapixel color 16:9 rotatable LCD
100% field of view
adj. brightness, contrast, color, sharpness and backlight
Microphone
None built-in
Recording Media
CF Card (Type 1 Only): 2 slots (Movie files); UDMA supported
SD Card: 1 slot: Still images, Custom Picture Data*, Clip Metadata and menu settings
*Custom Picture Data and settings are not compatible with data from other Canon models
USB Terminal
N/A
Video Terminal
Same as HD/SD-SDI Terminal
Audio Terminal
XLR 3-pin jack (2), Switchable between MIC/LINE
HDMI Terminal
Yes (Type A), output only
AV Mini-terminal/Headphone Terminal
3.5mm stereo mini-jack
WFT Terminal
For compatible Wi-Fi Accessory
Operating Temperature Range
Performance: 32°-104°F / 0°-40°C, 85% (relative humidity)
Operation: 23°-113°F / -5°-45°C, 60% (relative humidity)
Dimensions (W x H x D)
EOS C300 + Thumb Rest: 5.2 x 7.0 x 6.7 in / 133 x 179 x 171mm
EOS C300 + Grip: 6.9 x 7.0 x 6.7 in / 174 x 179 x 171mm
Camera + Monitor: 7.3 x 9.8 x 7.4 in / 185 x 249 x 187mm
Camera + Handle + Monitor: 7.3 x 11.2 x 11.9 in / 185 x 284 x 301mm
(not including lens hood, eyecup, grip belt)
Weight (not including lens)
Main Unit:
EOS C300: 3.2 lb / 1430g
Grip: 8.1 oz / 230g
Monitor Unit: 1.4 lb / 620g
Handle Unit: 6.3 oz / 180g
Thumb Rest: 0.35 oz / 10g
BP-955 Battery: 7.8 oz / 220g
Attachment fitting: 0.32 oz / 9g
CF Cards x 2: 0.63 oz / 18g
Measure hook: 0.11 oz / 3g
Body Cap, Camera Cover (either type): 0.63 oz / 18g
EOS C300 w/:
Grip, Monitor, BP-955, 2@CF 5.6 lb / 2520g
Grip, Monitor, Handle, BP-955, 2@CF 6.0 lb / 2700g



கருத்துகள்

  1. எளிய தமிழில் நிறைய தகவல்களுடன் ஒரு முழுமையான கட்டுரை!

    பதிலளிநீக்கு
  2. மதுரை டூ தேனி மற்றும் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி என்ற இரு திரைப்படங்களை canon eds 5D கேமராவை வைத்து S.P.S.குகன் அவர்களுடைய குழு ஒளிப்பதிவு செய்திருந்தனர்.நீங்கள் குறிப்பிட்ட இந்த கேமராவை வைத்து இன்னும் சிறப்பாக பதிவு செய்யமுடியும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பகிர்வு பாஸ்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. என்னை போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கு தமிழில் ஒரு பதிவு,நன்றி,தொடர்ந்து எழுதுங்கள்.
    -அருண்-

    பதிலளிநீக்கு
  5. நன்றி தேவா, மரா, அருண்.

    சேலம் தேவா://canon EOS 5D கேமராவை வைத்து// ஆமாம். அதன் மேம்படுத்தப்பட்டக் கேமராதான் இது.

    பதிலளிநீக்கு
  6. Sir, It is a very very usefull for "upcoming filmmakers" for me. congts...As soon as i will meet you,after getting a appoinment from you...Thanking you. S.MUTHAMIL(nellai)[email protected]

    பதிலளிநீக்கு
  7. Vijay,
    I grew by reading articles in Dinamani’s Saturday supplement TamilMani during eighties (1980's). Those were phenomenal articles in terms of literary quality and content (Science and Technology). This post belongs to that category. Kudos! Many many thanks.
    Mohan

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...