முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘Scarlet-X’ - சவால் விடும் புது எதிரி



Canon நிறுவனத்தின் ‘EOS C300’ அறிவிக்கப்பட்ட அதே நாள், அதன் தற்போதைய போட்டியாளராக கருதப்படும் RED ONE நிறுவனத்தின் அடுத்த கேமரா அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்புதிய கேமராவிற்கு ‘Scarlet-X’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

“The future is dependent on those who push… not those who react,”
- Jim Jannard, founder of RED Digital Cinema.

RED ONE கேமராவின் அறிமுகமே ஒரு புதிய புரட்சியாக அப்போது பார்க்கப்பட்டது. அக்கேமரா ஆகஸ்டு 2007-இல் நடைமுறைக்கு வந்தபோது அதன் தொழில்நுட்பம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிறிய வடிவில் இருந்த அக்கேமராவின் தரம் (4K) பிரமிப்பைக் கொடுத்தது. ஃபிலிமை யே(Film) மையமாக கொண்டிருந்த திரையுலகம் டிஜிட்டலை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பியது. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன.

முதல் காரணம், இச்சிறிய கேமராவில் கிடைத்த 4K விடியோ தரம். அதுநாள் வரை ஒரு விடியோ கேமராவினால் இத்தகைய தரத்தைக் கொடுக்க முடியும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஒருவேளை ‘ரெட் ஒன்’ அப்போது வெளியாகி இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் வேறொரு கேமராவில் அது சாத்தியமாகி இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாலும் ரெட் ஒன் அதை காலத்தே சாத்தியமாக்கியது.

இரண்டாவது காரணம், இத்தகைய தரம் வாய்ந்த கேமரா யாரும் எதிர்பாராதவிதத்தில் குறைந்த விலையில் கிடைத்தது. ஒப்பீட்டளவில் அதுநாள் வரை சந்தையில் இருந்த கேமராக்களைவிட ரெட் ஒன்னின் விலை மிகக் குறைவானதாக இருந்ததும், அக்கேமரா மிகுந்த வரவேற்பைப் பெறக் காரணமாகியது. குறைந்த விலையில் தேவையான தரம் என்பதே டிஜிட்டலை (ரெட் ஒன்) நோக்கித் திரைத்துறையை திரும்பிப் பார்க்க வைத்தது.


அதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் திரைப்படம் என்னும் கருத்தோட்டம் வலுவடைந்தது. ரெட் ஒன் அதன் சமகால போட்டியாளர்களைத் தாண்டி தன் கேமராவைப் பிரபலமாகியது. தொடர்ந்து அது தன் திறனை 4K -விலிருந்து 5K என மேம்படுத்திக்கொண்டிருந்த அதே வேளையில் யாரும் எதிர்ப்பாராத திசையிலிருந்து ஒரு வில்லன் அதற்கு முளைத்தான்.

அந்த வில்லனுக்கு 'Canon EOS 5D Mark II' என்றுப் பெயர். ஆமாம் 5D ரெட் ஒன்னுக்கு வில்லனாக அமைந்தது இத்துறையில் நிகழ்ந்த இன்ப ஆச்சியங்களில் ஒன்று. உண்மையில் 5D ஒன்றும் ரெட் ஒன்னின் தரத்திற்கு இணையானது அல்ல, என்றாலும் 5D மிகுந்த வரவேற்பைப் பெற்றது. காரணம் அதன் விலை மற்றும் உருவமைப்பு. விலை மிக மிகக் குறைவு (ரூ.ஒன்றறை லட்சம்) உருவமும் மிகச் சிறியது. ரெட் ஒன்னை விடச் சிறியது.

5D-இன் வளர்ச்சியும் அதற்கு பதிலடியாய் ரெட் ஒன் தன் நிறுவனத்தின் சார்பில் ‘Epic’ மற்றும் ‘Scarlet’ கேமராக்களை கொண்டுவந்ததும், இப்போட்டியை சமாளிக்க ‘ARRI’ தன் ‘Alexa’-வை களத்தில் இறக்கியதும் நாம் அறிந்ததுதான். அதேச் சமயம் Sony, Panavision, Thomson Grass Valley, Panasonic போன்ற மற்ற கேமரா நிறுவனங்களும் தன் புதிய கேமராக்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தன என்பது உண்மையானாலும், போட்டி என்பது இம்மூன்று கேமராக்களிடையேதான் நிகழ்ந்தது. இந்தியாவில்/தமிழ்நாட்டில் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் இம்மூன்று கேமராக்கள் மட்டுதான் சம பலம் வாய்ந்தவைகளாகக் களத்தில் இருக்கின்றன.

Canon நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்தது, Red One வட அமெரிக்க நிறுவனம், ARRI-யோ ஜெர்மன் நாட்டுத் தயாரிப்பு. இதுவும் இம்மூன்று நிறுவனங்களுக்கிடையே போட்டி உருவாக காரணமாயிற்று. தனக்கான வாடிக்கையாளர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க மூன்று நிறுவனங்களுமே பெரும் முயற்சிகளை மேற்கொண்டன.

அதுநாள் வரை கேனான் நிறுவனம், புகைப்படத்துறையில்தான் செல்வாக்குப் பெற்றிருந்தது. திடீரென்று திரைத்துறைக்குள்ளும் நிகழ்ந்த அதன் பிரவேசம் யாருக்கு அதிர்ச்சி கொடுத்ததோ இல்லையோ, ரெட் ஒன்னுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனாலயே அதனுடைய நேரடி எதிரியாக கேனானைக் கொள்ள வேண்டியதாயிற்று. அதேவேளை ரெட் ஒன்னின் சந்தையைத்தான் கேனான் பிடிக்க வேண்டியதாகவும் இருந்தது.


இந்நிலையில்தான் கேனான் தன் ‘EOS C300’ கேமராவை இம்மாதம் (3,நவம்பர்/2011) அறிவித்தது நாம் அறிவோம். அதே நாளில் ரெட் ஒன் நிறுவனமும் தன் புதிய கேமரா ‘Scarlet-X’ அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இவ்விரண்டு நிறுவனங்களின் போட்டி சூடுபிடித்திருக்கிறது.

இம்முறை ரெட் ஒன் பல சவால்களை கேனானுக்கு முன் வைத்திருக்கிறது. ‘Scarlet-X’ கேமரா 5K தரம் கொண்ட 'Still Image'-களைக் எடுக்கும் தரம் கொண்டது. 4K தரத்தில் விடியோவைப் பதிவுசெய்யும். ஆனால் கேனான் ‘EOS C300’ அப்படி அல்ல 4K தரத்திற்கு ஈடானது என்று சொல்லப்பட்டாலும் அது வெறும் 1080p விடியோவைத்தான் கொடுக்கும்.


Lens Mount-ஐப் பொருத்தமட்டில் ‘EF’ மற்றும் ‘PL’ ஆகிய இரண்டு Mount-லும் ‘Scarlet-X’ கிடைக்கிறது.

புகைப்படத்துறையிலிருந்து திரைத்துறைக்குள் கேனான் நுழைந்ததுப் போல், ரெட் ஒன் திரைத்துறையிலிருந்து புகைப்படத்துறைக்குள் நுழைந்திருக்கிறது. ‘Scarlet-X’ கேமராவைப் பயன்படுத்தி 5K REDCODE RAW-வில் புகைப்படங்களை எடுக்க முடியும் என்ற வசதியை அளித்ததன் மூலம் கேனானின் அடிமடியில் ரெட் ஒன் கைவைத்திருக்கிறது. பழிக்குப்பழி. நீ என் சந்தையை பிடித்தால் நான் உன் சந்தையைப் பிடிப்பேன். எப்பூடி!?


DSLR என்றால் என்ன என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்!. DSMC என்றால் என்ன என்றுத் தெரியுமா? 

இப்போது புதியதாக உயிர்த்தெழுந்திருக்கும் தொழில்நுட்பத்தின் செல்லப் பெயர் அது.

DSLR-ஐக் கேள்விப்படாதவர்களுக்கு: Digital-SLR (single lens reflector) என்பதன் சுருக்கம் அது.

DSMC என்பது Digital Still & Motion Camera என்பதின் சுருக்கம். அதாவது ஒரே கேமராவில் டிஜிட்டல் புகைப்படம் மற்றும் திரைப்படத்திற்கு தகுதியான விடியோ எடுக்கும் தொழில்நுட்பத்தைக் குறிப்பது.


‘Scarlet-X’ ஒரு DSMC வகைக் கேமரா. இக்கேமராவைப் பயன்படுத்தி தொழில்முறை புகைப்படக்காரர்கள் (Professional photographers) புகைப்படங்களை மிகுந்த தரத்தோடு எடுக்க முடியும். கேனானின் பேட்டைக்குள் ரெட் ஒன் நுழையும் முயற்சி இது.

மேலும் மிக முக்கியமான ஒரு கேடயத்தை ரெட் ஒன் நிறுவனம் கேனானுக்கு முன் பிடித்திருக்கிறது. அது விலை.

கேனானின் ‘EOS C300’ ($20,000) விட ரெட் ஒன்னின் ‘Scarlet-X’($9,750) விலை குறைவு. குறைந்த விலை என்பது கேடயமாகப் பயன்படும் அதே நேரம், கேனானின் மீது ஏவப்படும் பலமான ஆயுதமாகவும் மாறிவிட வாய்ப்புகள் இருக்கிறது! பொறுத்திருந்து பார்ப்போம்.

‘Scarlet-X’ கேமராவிற்குத் தேவையான துணைப்பாகங்கள் ரெட் ஒன்னின் முந்தையக் கேமராவான Epic-இன் பாகங்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் பலம்.



“ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பார்கள், அதுபோல இங்கே இரண்டு நிறுவனங்கள் ரெண்டுபட்டு, ஆளாளுக்கு, தான் பிஸ்தா என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் கூத்தாடிக்கு இல்லை.. இல்லை சினிமாக்காரர்களுக்கு கொண்டாட்டம். இந்த கொண்டாட்டம் எதுவரை போகிறது என்றுப் பார்ப்போம்.

கருத்துகள்

  1. தொழில்முறை புகைப்படக்கலைஞர்களுக்கும் கொண்டாட்டம்தான்... :))

    பதிலளிநீக்கு
  2. நன்றி சேலம் தேவா ...ஆமாம்..ஆமாம்

    பதிலளிநீக்கு
  3. சபாஷ் சரியான போட்டி,இது நிச்சயமாய் சினிமாக்காரர்களுக்கு கொண்டாட்டம் தான்.
    -அருண்-

    பதிலளிநீக்கு
  4. திரைத்துறையிலிருக்கும் புதியவர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும்.! தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஆதி, சித்ரவேல் சித்திரன்

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நல்லா இருக்கு.. திரைப்படத்துறைக்கு புதிய ஒளி...

    பதிலளிநீக்கு
  7. this is a valuble piece of information not only for film makers but also for film learners. VIJAY Sir you are doing a great job.- Karthy

    பதிலளிநீக்கு
  8. இது போன்ற காமிராக்களின் வருகையால், பலரின் சினிமா கனவுக்கள் நிறைவேரும் என்று நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
  9. உங்கள் தளத்திற்கு இன்றுதான் முதன்முதலில் வருகிறேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது நண்பரே.....கேமரா பற்றி அறியாத தகவல்களை தந்துள்ளீர். நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,