டிஜிட்டலின் கரங்கள் பரவாத துறை ஏதேனும் உண்டா என்ற கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால்.. நீங்கள் தயக்கமற்று சட்டென்று சொல்லி விடலாம் ..இல்லை என்று. அவ்வகையில் ஒளிப்பதிவிலும் டிஜிட்டலின் ஆதிக்கம் பரவத் துவங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. எல்லாத் துறைகளிலும்.. ஒரு புதிய தொழில்நுட்பத்தின் ஆரம்பக் கட்டம் என்பது விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும், விசனத்திற்கும் உட்பட்டே அமைகிறது. காலபோக்கில் அதன் குறைகள் களையப்பட்டு மேம்படுத்தப்படுகிறது. இங்கே ஒளிப்பதிவிலும் அதேதான் நிகழ்ந்தது.. நிகழ்கிறது. டிஜிட்டல் படப்பதிவு என்பது கால ஓட்டத்தில் தவிர்க்க முடியாது வந்து சேர்ந்த ஒரு தொழில்நுட்பம் என்றுக் கொண்டாலும், அதன் பலன்களை நாம் அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் கருத வேண்டியதாக இருக்கிறது. பல நிறுவனங்கள் டிஜிட்டல் படப்பதிவு கருவிகளில் கால்பதித்துவிட்டன. Panasonic, Canon, Sony, Arri, RedOne, Panavision என தொடரும் பட்டியலில், 'ARRI' நிறுவனம் 'Arriflex D-20' என்னும் டிஜிட்டல் கேமராவின் மூலம் தனது வலதுகாலை டிஜிட்டல் படப்பதிவுத் துறையில் எடுத்துவைத்தது. இது நிகழ்ந்தது நவம்பர் 200
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!