'ஒண்டிப்புலி' என்னும் புதிய படத்தை இப்போது ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறேன். இதில் 'Arri Alexa' கேமராவைப் பயன்படுத்துகிறேன். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கேமராவில் 'புகைப்படம்' (still-grabs) எடுக்கும் வசதியும் இருக்கிறது. இப்புகைப்படங்களை 'DI'-க்கு அடிப்படையாகக் கொள்ளலாம். இக்கேமராவைப் பற்றி சொல்லுவதற்கு நிறைய செய்திகள் இருக்கிறது. அவற்றை வரும் கட்டுரைகளில் சொல்லுகிறேன். இப்போதைக்கு 'ஒண்டிப்புலி' படத்திலிருந்து சில புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு.
(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...
அட்டகாசமான ஒளிப்பதிவு. கீழேயிருந்து மேலே எட்டாவது புகைப்படம் (இரவுக்காட்சி) பல விளக்குகளைக்கொண்டு உருவாக்கப்பட்டிருப்பத தெரிகின்றது. அது எனக்கு மிகவும் பிடித்த படம். வெளிப்புற பகல் காட்சிகளில் பச்சை வண்ணம் அதிகமாக இருப்பது போல் எனக்கு தெரிகின்றது. ஒருவேளை, இயற்கையாகவே அப்படி இருந்ததோ அல்லது என் மடிக்கணினியின் திரை செய்யும் கோளாறோ!
பதிலளிநீக்குநன்றி சக்திவேல்..இப்புகைப்படங்கள் எவ்வித வண்ண மாறுபாடும் செய்யப்பட்டதல்ல..பச்சை அதிகமாக இருப்பதைப்பற்றி- உங்கள் கணினியில் நான் பார்த்தால் மட்டுமே கருத்து சொல்ல முடியும்..:)
பதிலளிநீக்குமுதல் போட்டோ தான் class.மத்ததெல்லாம் பரவாயில்லை.நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கும்ம்.வாழ்த்துகள் பாஸ்..
பதிலளிநீக்குகாட்சித்துண்டுகள் என்ற உடனே வீடியோவாக இருக்குமென நினைத்துவிட்டேன்
நன்றி மரா, கார்க்கி.. //காட்சித்துண்டுகள் என்ற உடனே வீடியோவாக இருக்குமென நினைத்துவிட்டேன்// ஓ அப்படி ஒரு அர்த்தம் வருகிறதா?! தலைப்பை மாற்றி விட்டேன்.. :)
பதிலளிநீக்குஒவ்வொரு படமும் நன்றாக உள்ளது. இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"
பதிலளிநீக்குஇந்த கேமராவைப்பற்றி நீங்கள் எழுதப்போகும் பதிவை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்
பதிலளிநீக்குgood and nice work sir
பதிலளிநீக்குFirst one is Awesome!!!!.The picture u have taken in morning(2 pics) & in night(26 th pics) are also great. I am regular viewer of your blog
பதிலளிநீக்குso i was surprised to see you after a long time.
I am not able to type in tamil regret for this.
My Best Wishes!!!
Thirumavalavan
thank u valavan
பதிலளிநீக்குvijay, all is well. :)
பதிலளிநீக்குமூவியிலிருந்து எடுத்த ஸ்டில்களா? ஸ்டில்களாகவே எடுக்கப்பட்டவைகளா?
பதிலளிநீக்குதருமி: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கேமராவில் 'புகைப்படம்'(still-grabs) எடுக்கும் வசதியும் இருக்கிறது.
பதிலளிநீக்குஸ்டில்களாகவே எடுக்கப்பட்டவைகள்
பதிலளிநீக்குthank u..சுரேஷ் கண்ணன்/தருமி
பதிலளிநீக்குஅழைப்பிதழ்:
பதிலளிநீக்குஉங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளேன்.
மனோரஞ்சிதம் - புகைப்படச் சரம்
http://www.blogintamil.blogspot.in/2012/04/blog-post_06.html
வருகை புரிந்து உங்கள் கருத்துகளைச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
புகைப்பட ஆர்வலன் எனும் முறையில் சில படங்கள் கருத்தைக் கவருகின்றன!
பதிலளிநீக்குபழைய நாட்களில் Arriflex (Arri என்பார்கள்) என்ற ஒரு கருவி இருந்ததே, அதன் டிஜிடல் வடிவமா Arri Alexa?
உங்களை அறிமுகப் படுத்திய திரு.வெங்கட் நாகராஜுக்கும் நன்றிகள்!
R.S.KRISHNAMURTHY// ஆமாம் சார்.. Arri என்னும் நிறுவனத்தின் டிஜிட்டல் திரைப்படக் கேமரா இது.
பதிலளிநீக்குஇங்கே காணக்கிடைக்கும் படங்கள் எல்லாம்..ஒண்டிப்புலி என்னும் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளின் மாதிரிகள்.