முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'Arri Alexa' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்


டிஜிட்டலின் கரங்கள் பரவாத துறை ஏதேனும் உண்டா என்ற கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால்.. நீங்கள் தயக்கமற்று சட்டென்று சொல்லி விடலாம் ..இல்லை என்று. அவ்வகையில் ஒளிப்பதிவிலும் டிஜிட்டலின் ஆதிக்கம் பரவத் துவங்கி வெகுகாலம் ஆகிவிட்டது.

எல்லாத் துறைகளிலும்.. ஒரு புதிய தொழில்நுட்பத்தின் ஆரம்பக் கட்டம் என்பது விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும், விசனத்திற்கும் உட்பட்டே அமைகிறது. காலபோக்கில் அதன் குறைகள் களையப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.

இங்கே ஒளிப்பதிவிலும் அதேதான் நிகழ்ந்தது.. நிகழ்கிறது. டிஜிட்டல் படப்பதிவு என்பது கால ஓட்டத்தில் தவிர்க்க முடியாது வந்து சேர்ந்த ஒரு தொழில்நுட்பம் என்றுக் கொண்டாலும், அதன் பலன்களை நாம் அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் கருத வேண்டியதாக இருக்கிறது.

பல நிறுவனங்கள் டிஜிட்டல் படப்பதிவு கருவிகளில் கால்பதித்துவிட்டன. Panasonic, Canon, Sony, Arri, RedOne, Panavision என தொடரும் பட்டியலில், 'ARRI' நிறுவனம் 'Arriflex D-20' என்னும் டிஜிட்டல் கேமராவின் மூலம் தனது வலதுகாலை டிஜிட்டல் படப்பதிவுத் துறையில் எடுத்துவைத்தது. இது நிகழ்ந்தது நவம்பர் 2005-இல். பிறகு 2008-இல் 'Arriflex D-21' என்னும் மேம்படுத்தப்பட்ட கேமராவை கொண்டு வந்தது. அவ்விரு கேமராக்களையும் ஏற்றுக்கொள்ளுவதா இல்லையா என்று திரையுலகம் யோசித்துக்கொண்டிருக்கும் போதே 'Arri' நிறுவனம் மற்றுமொரு புதிய கேமராவை அறிமுகப்படுத்தியது.




ஏப்ரல்-2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 'Arri Alexa' என்னும் இக்கேமரா பல விதங்களில் அதன் முந்தைய டிஜிட்டல் கேமராக்களில் இருந்து மேம்படுத்தப்பட்டு இருந்தது. எளிமைப்படுத்தப்பட்டிருந்தது என்று சொல்லுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

தற்போது 'Arri Alexa' கேமராவைப் பயன்படுத்தி ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துக்கொண்டிருக்கிறேன். அக்கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை முந்தைய பதிவில் காட்சிப்படுத்தியிருக்கிறேன்.

இப்படத்தில் 'Arri Alexa' கேமராவின் மேம்படுத்தப்பட்ட வடிவமான 'Arri Alexa Plus'-ஐ பயன்படுத்துகிறேன். அக்கேமராவின் திறனைப் பற்றி சில செய்திகளை இங்கே பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.


ஒரு ஒளிப்பதிவாளருக்கு, கேமரா என்னும் கருவி எவ்வகையில் துணைபுரியும் அல்லது துணைபுரியவேண்டும்?

இதே கேள்வியை சற்று மாற்றிக்கேட்டு புரிந்துக்கொள்வோம்.. 'ஒரு ஒளிப்பதிவாளர் விரும்பும் அல்லது உருவாக்கும் பிம்பத்தை, கேமரா என்னும் கருவி பதிவு செய்ய எத்தகைய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்?

இந்தக் கேள்விக்கான பதிலை இரண்டு தளத்திலிருந்து சொல்லவேண்டும். ஒன்று 'பிலிம் கேமரா' மற்றொன்று 'டிஜிட்டல் கேமரா'. இரண்டு கேமராக்களின் செயல்பாடுகளிலும் ஆதாரமாக வித்தியாசம் இருக்கிறது. இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. பிலிம் கேமராவின் செயல்பாடுகள் டிஜிட்டல் கேமராவிலும் இருக்கிறது என்றாலும், டிஜிட்டல் கேமராவின் செயல்பாடுகளின் பல மாற்றங்கள் உண்டு. இங்கே, இந்த கட்டுரையின் நோக்கம் டிஜிட்டல் கேமராவைப் பற்றிப் பேசுவது என்பதனால், ஒரு டிஜிட்டல் கேமராவின் தகுதிகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

'ஒண்டிப்புலி' திரைப்படத்திலிருந்து ..

தியரியாக இல்லாமல், நடைமுறையில் ஒரு டிஜிட்டல் கேமராவின் தேவைகள் என்ன என்பதையும் 'Arri Alexa Plus' கேமரா அதை எவ்விதத்தில் பூர்த்தி செய்தது என்பதையும் என் அனுபவத்தின் அடிப்படையில் இக்கட்டுரையில் விவரிக்க முயற்சிக்கிறேன்.

டிஜிட்டல் கேமராவின் முக்கிய பாகங்களாக கருதப்படுவைகள்:

அ. லென்ஸ் மௌண்டு (Lens Mount)
ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor)
இ. ரெக்கார்டிங் (Recording)
ஈ. வியு ஃபைண்டர் (View Finder)



அ. லென்ஸ் மௌண்டு (Lens Mount): 

'Alexa'வில் 'PL -Lens Mount' பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கும் லென்சுகளை (Ultra Prime, Master Prime, S4i, HR Zoom, Optimo Zoom..etc) பயன்படுத்த முடிகிறது. என்றாலும் இதன் 'லென்சு மௌண்டு' என்பது மாற்றி அமைத்துக்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதனால், லென்சுகளுக்கு ஏற்ப நாம் மௌண்டை மாற்றியமைத்து பயன்படுத்தலாம். (Exchangeable Lens Mount allows the use of PL, Panavision and stills camera lenses)


நான் 'Ultra Prime' லென்சுகளைப் பயன்படுத்துகிறேன். இதே லென்சுகளைத்தான் முந்தைய படங்களிலும் பயன்படுத்தினேன் என்பதனால்.. லென்சின் வழி செல்லும் ஒளியின் தன்மையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. (ஒரு புதிய லென்சை பயன்படுத்தும் போது, அந்த லென்சு ஒளியில் ஏற்படுத்தும் வண்ண மாற்றத்தையும், ஒளியை உறிஞ்சிக் கொள்வதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.)


மேலும் ஒளிப்பதிவில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, நாம் பதிவு செய்யும் பிம்பங்களின் 'போக்கஸ்' (Focus). போக்கசை சரியாக அமைக்க, அடிப்படையாக நல்ல லென்ஸ் வேண்டும். அதற்கு தேவையானபடி அந்த லென்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். 'Ultra Prime'லென்ஸ் அவ்வகையில் சிறப்பான லென்ஸ் ஆகும்.

மற்றவற்றை வரும் கட்டுரையில் காண்போம்...












கருத்துகள்

  1. விஜய் ஆம்ஸ்ரோங் உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றி! தொடர்ந்து உங்கள் பதிவுக்காகக் காத்திருக்கின்றோம். மற்றும் உங்கள் பதிவுகளை எமது கனடியத் தமிழ்த்திரைப்பட மேம்பாட்டு மைய(www.ctceo.ca) உறுப்பினர்கள் வாசித்து பயனடையும் வகையில் உங்கள் கட்டுரைகளுக்கான தொடுப்பைக் கொடுத்துள்ளோம்.( http://www.facebook.com/profile.php?id=100003044934381)

    பதிலளிநீக்கு
  2. விஜய்,
    Your posts are lucid and informative. I enjoy reading your blog.

    ஒரு சிறு வேண்டுகோள்: Please change dark background and light font into light background and dark font as it pains to read the blog.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,