இணையத்தில் ஏதோ படித்துக்கொண்டிருந்த போது ‘UHDTV’ என்றொரு பதத்தை பார்த்தேன். அட ‘HDTV’ தெரியும், அதென்ன UHDTV..!? என்ற ஆர்வம் மேலிட அதைப்பற்றி படிக்கத் தேட , ஆர்வம் கொடுக்கும் பல தகவல்கள் கிடைத்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். Ultra-high-definition television என்பதன் சுருக்கம் ‘UHDTV’. 4K(2160p) மற்றும் 8K(4320p) ‘Pixels’ தரம் கொண்டது என்கிறார்கள். இதைப் புரிந்துக் கொள்ள டிஜிட்டல் பற்றிய சில தகவல்களை அறிந்திருக்க வேண்டும். பெரும்பான்மையோருக்கு அவை தெரிந்திருக்கும். அல்லது இத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருபர்கள் ‘ அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம் ’ என்னும் கட்டுரையைக் கடந்து வந்திருப்பதன் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இல்லையெனில் தயவுசெய்து சிரமம் பார்க்காமல் ஒரு தடவை அக்கட்டுரையை படித்துவிட்டு வந்துவிடுங்கள். அப்போதுதான் மேலே சொல்லப்போகும் தகவல்களை உள்வாங்கிக் கொள்ள முடியும். சுருக்கமாக HDTV என்பது.. 1080p - 1920×1080p (approximately 2.1 megapixels per frame) 1080i - 1920×1080i (approximately 2.1 megapixels per frame) 1440×1080i ...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!