முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

UHDTV..!?



இணையத்தில் ஏதோ படித்துக்கொண்டிருந்த போது ‘UHDTV’ என்றொரு பதத்தை பார்த்தேன். அட ‘HDTV’ தெரியும், அதென்ன  UHDTV..!? என்ற ஆர்வம் மேலிட அதைப்பற்றி படிக்கத் தேட , ஆர்வம் கொடுக்கும் பல தகவல்கள் கிடைத்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

Ultra-high-definition television என்பதன் சுருக்கம் ‘UHDTV’. 4K(2160p) மற்றும் 8K(4320p) ‘Pixels’ தரம் கொண்டது என்கிறார்கள். இதைப் புரிந்துக் கொள்ள டிஜிட்டல் பற்றிய சில தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

பெரும்பான்மையோருக்கு அவை தெரிந்திருக்கும். அல்லது இத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருபர்கள்  ‘அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்’ என்னும் கட்டுரையைக் கடந்து வந்திருப்பதன் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  இல்லையெனில் தயவுசெய்து சிரமம் பார்க்காமல் ஒரு தடவை அக்கட்டுரையை படித்துவிட்டு வந்துவிடுங்கள். அப்போதுதான் மேலே சொல்லப்போகும் தகவல்களை உள்வாங்கிக் கொள்ள முடியும்.

சுருக்கமாக HDTV என்பது..
1080p - 1920×1080p (approximately 2.1 megapixels per frame)
1080i - 1920×1080i (approximately 2.1 megapixels per frame)
1440×1080i (approximately 1.6 megapixels per frame)
720p  - 1280×720p  (approximately 0.9 megapixels per frame)

[The letter "p" here stands for progressive scan while "i" indicates interlaced]

4K UHDTV என்பது ..
2160p -  3840 × 2160 (approximately 8.3 megapixels per frame)


8K UHDTV என்பது ..
4320p - 7680 × 4320 (approximately 33.2 megapixels per frame)


1080p HDTV- ஐப் போன்று பதினாறு மடங்கு (yes.. 16 times) அதிக பிக்சல்கள் கொண்டது 8K UHDTV என்கிறார்கள். ஏறக்குறைய ஒரு IMAX (15/70mm IMAX) படத்திற்கான தரம் கொண்டது என்கிறார்கள் (ஹப்பா..). ஒலியில்  22.2 surround sound அமைப்பு கொண்டதாம்.

4K UHDTV-ஐ  UHDTV1 என்றும்  8K UHDTV-ஐ UHDTV2 என்றும் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள்.  நொடிக்கு 24, 25, 50, 60 ,120 ஃபிரேம்கள் மாறும் தகுதிக் கொண்டது.

ஜப்பானிய நிறுவனமான ‘NHK Science & Technology Research Laboratories’ 2003-இல் இதற்கான கேமராவை வடிவமைத்து இத்தொழில்நுட்பத்தை பரிந்துரைத்தது. பல கட்ட மாறுதலுக்குப்பிறகு  2007-இல் ‘UHDTV’-க்கான  ‘SMPTE’ தரம் நிர்ணயிக்கப்பட்டது. 2015 - 2020 ஆண்டுகளுக்குள்ளாக பொது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலும் சீனாவிலும் 2013-2014 -க்குள்ளாக வீடுகளுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

2006-இல் NHK நிறுவனம்  ‘450 inch’ (11.4m) தொலைக்காட்சித் திரையில் தங்களுடைய UHDTV விடியோவை திரையிட்டு காட்டிவிட்டார்கள். (பெரும்பான்மையாக நம் வீடுகளில் இருப்பது 21inch TV)  

Aptina Imaging, RAI, BSkyB, Sony, Samsung, Panasonic Corporation, Sharp Corporation, Toshiba போன்ற டிஜிட்டல் இமேஜிங் நிறுவனங்கள் 2008-இலிருந்து ‘UHDTV’ தொழில்நுட்பத்தில் ஈடுபடத்துவங்கிருக்கின்றன.

2011-இல் SHARP நிறுவனம் NHK-வுடன் இணைந்து ‘85inch LCD display’(7680 × 4320 pixels at 10 bits per pixel) அறிமுகப்படுத்தியது.

ஏப்ரல், 2012 -இல் NHK நிறுவனம் Panasonic-வுடன் இணைந்து ‘145inch (370 cm) display (7680 × 4320 at 60 fps)-வை அறிமுகப்படுத்திருக்கிறது. இது 33.2 million 0.417 mm square pixels தரம் கொண்டது.


மே, 2012-இல்  NHK நிறுவனம் உலகின் முதல் ‘ultra-high definition shoulder-mount camera’-வை கொண்டுவந்தது. அதே மாதம் ‘33.2 megapixel video at 120 fps’ தரத்தில் இயங்கும் கேமராவாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பெரிய திரையில் காட்சிப்படுத்தப்படுவதால் நொடிக்கு 120 ஃபிரேம்கள் என தரம் நிர்ணயித்திருக்கிறார்கள்.

2012, ஒலிம்பிக்கின் போது லண்டன் நகரத்தில் ‘15 meter wide screens’ அமைக்கப்பட்டு, போட்டிகளின் காட்சியை UHDTV பிம்பங்களாக திரையிடப்பட்டன. இச்சேவையை BBC நிறுவனம் அளித்திருக்கிறது.

மே, 2012 -இல் Sony நிறுவனம் உலகின் முதல்  ‘Consumer-Prosumer 4K 3D Projector’-ஐ அறிமுகப்படுத்திருக்கிறது.

ஆகஸ்ட், 2012-இல்  LG நிறுவனம் உலகின் முதல் ‘3D UHDTV / 4K system’ தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது.



மேலும் பல தகவல்கள், தெரிவிக்கும் செய்தி யாதெனில்.. அடுத்த ஆண்டுக்குள்ளாக உலகின் பல நாடுகள் UHDTV ஒளிபரப்பிற்கு மாறிவிடுவார்கள். கொரியா போன்ற நாடுகளில் கூட இவை வந்துவிடும் எனத் தெரிகிறது. பல சேட்டலைட் தொலைக்காட்சிகள் தங்கள் ஒளிபரப்பை HDTV-லிருந்து UHDTV-க்கு மாற்றத் தயாராகயிருக்கிறார்கள். சில தொலைக்காட்சிகள் நேரடியாக 8K UHDTV தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நினைக்கின்றன. தேவையற்ற இடைச்சொருகளாக 4K UHDTV தவிர்த்து விடுவதற்காக. எப்பூடி..!

உலகின் கதை இப்படிப் போய் கொண்டிருக்க.. இங்கே இந்தியாவில் என்ன கிடைக்கிறது என்பது நாம் அறிந்ததுதான்.

தொலைக்காட்சியே இப்படி என்றால், திரைப்படம் சார்ந்த தொழில்நுட்பங்கள் எங்கே போகும் என்பதைக் கற்பனை செய்துப்பாருங்கள். டிஜிட்டல் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் எல்லா திரைப்படங்களும் 3D படங்களாக இருக்கும் மேலும் அவை IMAX படங்களாகவும் இருக்கும் என்பதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. திரையரங்கில் Projector-மூலம் திரையிடுவது போய், LCD Display-க்களாக மாறிவிடவும் சாத்தியமிருப்பதை இந்த  UHDTV தொழில்நுட்பம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

நம்ம ஊரில் இவையெல்லாம் எப்போது வரும் என்பதும், நாம் அதற்கு எப்போது தயாராகப்போகிறோம், எதிர்பார்க்கப்போகிறோம், தகுதியாக்கிக் கொள்ளபோகிறோம் என்பதெல்லாம் வருங்காலத்திற்கான புதிர்களில் ஒன்றாகக் வைப்போம். எது எப்படியோ.. இப்போதைக்கு சும்மா இதைப்பற்றி தெரிந்து வைத்துக் கொள்வோம்.  :)




கருத்துகள்

  1. நண்பரே...நல்ல வேளை காப்பாத்துனீங்க...புது LED டிவி வாங்கலான்னு இருந்தேன்.
    சாமி மாதிரி கண்ணை திறந்தீட்டீங்க.
    UHDTV வருகிற வரைக்கும்... ஒட்டை ஒனிடா டிவிதான்.


    என்ன...அதுல...சவுண்ட்டுதான் அப்பப்ப காணம போயிருது.

    பதிலளிநீக்கு
  2. அட ராமா, இவனுக அழிச்சாட்டியம் தாங்கலையே.. 8k வா? ஓவர் ஸ்பீட்ல போறானுகளே.. என்னதான் பண்றது? எரிச்சல்ல சொல்லல.. ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் சொல்கிறேன். செமை!!


    இங்க ஒரு ஐமேக்ஸுக்கு துப்பில்லாம உக்காந்திருக்கோம். சாதாவுல பாத்து பாத்து, HDயே போன ஜென்ம புண்ணியத்துல நமக்கு கிடைச்சிருக்குனு தோணுச்சு. இன்னும் இங்க பாதி தேட்டர்ல 1950ல கண்டுபுடிச்ச புரொஜக்டர்லதான் படம் காமிக்கிறானுக.. அவனுக காதுலல்லாம் என்னைக்கு இந்த சங்க ஊதி.. என்னைக்கு நான் நம்மூர்ல 8Kவுல படம் பாக்க... அதுக்குள்ள எனக்கு சங்கு ஊதிருவாங்கனு நினைக்கிறேன். :-)))))))))))

    பதிலளிநீக்கு
  3. ஹா..ஹா.. நீங்கபாட்டுக்கனு ஊருக்கு போய் உட்கார்ந்துட்டா.. இதை எல்லாம் எப்படி கொண்டுவரது?.. சீக்கரம் வாங்க. போய் ஊதுவோம்..

    பதிலளிநீக்கு
  4. Hello Sir,


    I read some of ur articles. Its useful. If u dont mind can u write about IMAX bit lengthy in Tamil.

    பதிலளிநீக்கு
  5. Hi Vijay ur postings are really wonderful & useful. Hatts off u. I have red all of ur postings. Because Im more interested n photography. Unfortunately im working as a graphic designer.
    எண்ணெயு பொறுத்தவரை 3டி தொழில்நுட்பம் ஏதோ ஒரு சில படங்களில் பயன்படுத்தலாம். ஆனால் எல்லா படங்களிலும் பார்த்தால் வேருத்துவிட்மென்று தோணுது. I feel its not convienient to enjoy the movie. What s ur view.?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,