முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

iPhoneography: ஐஃபோனோகிராபி

‘ஐஃபோனோகிராபி’ என்பது  ‘Apple iPhone’-ஐப் பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படக்கலையைக் குறிப்பது. இம்முறையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்ற புகைப்படக்கலையிலிருந்து சற்றே வேறுபடுகிறது. காரணம்.. இவை முழுக்க ‘iOS device’களை மட்டுமே பயன்படுத்தி எடுப்பதாகும். ‘iOS device’ என்பது Apple நிறுவனத்தின் ‘mobile operating system’(மொபைல் இயக்க முறைமை)-ஐக் குறிக்கிறது. எப்படி ‘ Google's Android’, ‘ Microsoft's Windows Phone’ இருக்கிறதோ, அதுபோல இதுவும் ஒரு இயக்க மென்பொருள். 2007-ஆம் ஆண்டு ஆப்பிள் தன்னுடைய ‘iPhone 2G’ தொலைபேசியை அறிமுகப்படுத்தியதிலிருந்து இந்த ‘ஐஃபோனோகிராபி’ என்னும் கலை துவக்கம் பெற்றது. ஆரம்பத்தில் ‘2 megapixel’ தரத்திலிருந்த இப்படங்களின் தரம், இன்று ‘8-megapixel’தரத்தை எட்டியிருக்கிறது. ஐஃபோனை பயன்படுத்தி எடுக்கப்படும் படங்கள், அதிலேயே திருத்தமும் (Corrections) செய்யப்படுகிறது. புகைப்படக்கலை என்பது கேமராவைப் பயன்படுத்திப் படமெடுப்பது மட்டுமல்ல. அவற்றைத் தக்க வகையில் திருத்தம் செய்து, வண்ணங்களை நிர்ணயித்து, சரியான வடிவத்தில் வெளியிடுவதுமாகும். இந்தத் திருத்தங்கள் முன்...

சித்திரமும் கைப்பழக்கம்

அண்மைக்காலமாக என் திரைத்துறை நண்பர்களிடமிருந்து(மூத்த..?!) ஒரு தகவலை அறிய முடிகிறது. பல்லாண்டு காலம் இத்திரைத்துறையில் உதவி இயக்குனராக, இணை இயக்குனராக அனுபவம் பெற்று திரைப்படம் இயக்கத் தயாராகிவிட்ட அவர்கள், தயாரிப்பாளரை அணுகும் போதெல்லாம்.. இத்தகைய கேள்விகளை சந்திப்பதாக சொல்லுகிறார்கள். “நீ குறும்படம் எடுத்திருக்கிறாயா? எடுத்தப் படத்தைக் காட்டு. ஒரு குறும்படம் எடுப்பதற்கான அளவிற்கு ஒரு கதை இருந்தால் போதும். சும்மா அது இது வென்று கதை வேண்டாம். காமெடிக்கதை இருந்தால் சொல்லு. சின்ன பட்ஜெட்டில் எடுக்கற மாதிரி கதை வைத்திருக்கிறாயா?.. ஓ, இத்தனை வருடமாக திரைத்துறையில் இருக்கிறாயா?? அப்போ நீ பழைய ஆளு..” இத்தகைய நிலை எதனால் வந்தது என்பதை நாம் அறிவோம். அண்மைக்காலத்தில் வெற்றியடைந்த ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘நேரம்’, போன்ற படங்களின் வெற்றியும், அதன் பின்னால் இருந்த குழுவின் தகுதியையும் அடிப்படையாகக் கொண்டு இத்தகைய நிலைக்கு/முடிவுக்கு நம் தயாரிப்பாளர்கள் வந்திருக்கிறார்கள் என்பது இலகுவாக ஊகிக்க முடிகிற விஷயம்தான். ஒருவகையில் ...