ஒளிப்பதிவில் மிக ஆதாரமானது ஒளியமைப்பு. ஒரு காட்சியின் தன்மையை, அது நிகழ்கின்ற தளத்தின் இயல்பை, காலத்தை, உணர்ச்சியை பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பதில் ஒளியமைப்பு மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு காட்சியை செல்லுலாயிடில்(இப்போது டிஜிட்டலில்) பதிய, அல்லது திரைப்படக்காட்சியாக மாற்ற.. அக்காட்சியைப் பல ஷாட்டுகளாக (shots) பிரித்துப் பதிவு செய்து, அப்படித் தனித்தனியான ஷாட்டுகளாக இருப்பவற்றை படத்தொகுப்பின் போது ஒன்றிணைத்து ஒரு காட்சியாக மாற்றுகிறோம் என்பதை நாம் அறிவோம். மேலும் அக்காட்சிக்கான வசனம், பின்னணி இசை, சப்தங்கள் போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் அக்காட்சியின் நம்பகத்தன்மை அல்லது அக்காட்சியின் உயிரோட்டம் நிலை நிறுத்தப்படுகிறது / வரையறுக்கப்படுகிறது. அதே நேரம் மிக முக்கியமான ஒன்றை நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறுகிறோம் அல்லது அது நம் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறது. அது.. அக்காட்சி ஒளியூட்டப்பட்டிருக்கும் விதம்தான். பொதுவாக, ஒரு காட்சியில் நடிக்கும் நடிகனின் நடிப்பு, அவன் பேசும் வசனம், அதன் பின்னணி இசை, சிறப்பு சப்தங்கள், ஒளிப்பதிவு போன்றவை பார்வையாளனின் கவனத்தை தனியாக ஈர்க்கக் கூடாத
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!