முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூர்த்தி சிறுசு... கீர்த்தி பெருசு' : ‘GoPro’ கேமரா ஓர் அறிமுகம்


டிஜிட்டல் கேமராக்களின் வளர்ச்சி நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது என்பதை நாம் அறிவோம். பல வகையான கேமராக்கள் வந்துவிட்டன. சின்னதும் பெரிதுமாக பல கேமராக்கள் இன்று கிடைக்கின்றது. தரத்தில் ஒன்றுக்கொன்று குறைந்ததில்லை என்று சொல்லும்படிதான் எல்லாமிருக்கின்றது. நுணுக்கமாக சில வித்தியாசங்களை கொண்டிருக்கின்றன என்றாலும், இருபது கிலோ எடைக்கொண்ட ஒரு கேமரா செய்யக்கூடிய அல்லது தரக்கூடிய தரத்தை இருபது கிராம் எடைக்கொண்ட ஒரு கேமராவால் தரமுடிகின்ற அளவிற்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மேம்பட்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை. அவ்வகையில் அளவில் மிகச்சிறிய கேமராவான ‘GoPro’ கேமராவைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இக்கட்டுரை.

இந்நிறுவனத்தின் நிறுவனர் ‘Nick Woodman’ 2002 - இல் ஆஸ்திரேலியாவில்  ‘surfing’ (அலையாடல்) செய்ய போயிருந்தபோது தோன்றின யோசனையாம் இது. அலையாடலை அருகிலிருந்து படம் பிடிக்க முடியாததை பார்த்தபோது அதற்கான ஒரு கேமராவை வடிவமைக்க வேண்டும் என்று அவருக்கு தோன்றி இருக்கிறது.  ‘surfboard’ -இல் இணைக்கும் படியான சிறிய வடிவில் அக்கேமரா இருப்பதோடு அதன் விடியோ தரமாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்பியிருக்கிறார். அதாவது அது ஒரு ‘professional’ கேமராகவும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் ‘GoPro’ என்ற பெயரை தேர்வு செய்திருக்கிறார்.

April 13, 2005 - இல் அந்நிறுவனத்தின் முதல் கேமரா வெளிவந்தது.  ‘GoPro HERO 35mm, All-Season Sports Camera’ என்ற பெயரைக் கொண்ட அக்கேமரா  2.5 / 3 inches (64 by 76 mm) அளவிலும் 200 கிராம் எடையும் கொண்டிருந்தது. கொடாக் படச்சுருளைப்பயன்படுத்தி 24 புகைப்படங்களை எடுக்கலாம் என்ற வகையில் வடிமைக்கப்பட்டிருந்தது.


Shockproof and waterproof
Comes preloaded with Kodak 400 speed 24 exposure film
Pivots upright for on the fly photos
Comes with the Ultimate Camera Strap

பிறகு 2007 -இல் ‘Digital HERO 3’ கேமரா அறிமுகப்படுத்தப்பட்டது. 3-megapixel கேமராவான இது   ‘standard definition 512 × 384’ விடியோவையும் பதிவு செய்யும் தகுதியைக் கொண்டிருந்தது. தொடர்ச்சியாக Digital HERO 5(2008), HD HERO 960(2010), HD HERO(2010), HD HERO2(2011), HERO3(2012) என பல மாடல்களில் கேமராக்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு புதிய கேமராவும் அதன் முந்திய மாடலிருந்து தரத்தில் மேம்பட்டிருந்தன. அவ்வகையில் தற்போது ‘HERO3+’ என்ற கேமராவை அந்நிறுவனம் 2013 அக்டோபரில் அறிமுகப்படுத்தியது.


இக்கேமரா 4K(15fps) தரம் கொண்ட விடியோவை பதிவுசெய்கிறது. 1440p48, 1080p60, 960p100 மற்றும் 720p120 தரம் கொண்ட விடியோக்களை பதிவு செய்கிறது.

1440p48 என்பது 1920x1440 Screen Resolution பிம்பங்களை நொடிக்கு 48 பிரேம்கள் என்ற கணக்கில் பதிவுசெய்கிறது என்பதைக் குறிக்கிறது. நொடிக்கு 24, 24, 48 பிரேம்கள் வரை இந்த தரத்தில் விடியோவை பதிவு செய்யலாம்.

மேலும்12 MP தரம் கொண்ட புகைப்படங்களை எடுக்க முடிகிறது. Wi-Fi வசதி இணைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கேமராவிலிருந்து விடியோக்களை Wi-Fi மூலம் மொபையில் ஃபோனில் பார்க்கலாம். தூரத்திலிருந்து ரிமோட் மூலமாகவோ அல்லது மொபைல் ஃபோன் மூலமாகவும் கேமராவை இயக்கலாம். மேலும் இக்கேமரா ‘Waterproof to 131’/40m’ வசதியும் கொண்டது. 'View Finder' வசதி கிடையாது. அக்குறைய நிவர்த்தி செய்ய தனியாக இணைத்துக்கொள்ளும் வகையில் 'LCD' உண்டு. இதை கேமராவின் பின்புறத்தில் பொருத்திக்கொள்ளலாம். மொபைல் ஃபோன் அல்லது TAB-இல் பயன்படுத்த 'App' உண்டு. இக்கேமராவின் மூலம் எடுக்கும் விடியோக்களை படதொகுப்பு செய்ய தனியாக இலவச மென்பொருளும் உண்டு. இரண்டு கேமராக்களை இணைத்து  '3D' காட்சிகளையிம் பதிவுசெய்யலாம்.










இக்கேமராவின் எடை:
Camera: 74g. 
Camera with housing: 136g
 
இக்கேமராவின் சிறப்பே, இத்தனை எடை குறைந்த கேமராவை எங்கே வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம் என்பதுதான். மோட்டார் சைக்கில் ஓட்டும் ஒருவரின் தலைகவசத்தில், சக்கரத்தின் அருகில், கையில், மார்பில் என்று நம் விருப்பம் படி இக்கேமராவை இணைக்க தேவையான உபகரணங்கள் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் நாம் நினைக்கும் விதத்தில் காட்சிகளை பதிவு செய்ய முடிகிறது. இன்று உலகில் நடக்கும் பல விளையாட்டுகளில் இக்கேமரா பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டுத்துறைக்காகத்தான் இக்கேமரா கண்டுபிடிக்கப்பட்டப் போதும், தற்போது திரைத்துறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்படுறது. வாகனங்களின் சக்கரங்களுக்கு அருகில், நீருக்கடியில் நடக்கும் காட்சியை படம்பிடிக்க என பல சந்தர்ப்பங்களில் இக்கேமரா பேருதவியாகிருக்கிறது.













நான் கூட.. ‘அழகு குட்டி செல்லம்’ மற்றும் ‘தொட்டால் தொடரும்’ திரைப்படங்களில் இக்கேமராவை பயன்படுத்தி இருக்கிறேன். அழகு குட்டி செல்லத்தில் சிறுவர்கள் சைக்கிளில் தப்பியோடும் ஒரு காட்சியில் இக்கேமராவை சைக்கிளின் கைப்பிடிகளில் பொருத்தி படமாக்கி இருக்கிறோம். தொட்டால் தொடருமில் வாகனத்துரத்தல் ஒன்று வருகிறது. இதில் வாகனங்களில் பொருத்தி படமாக்கினோம். மிக எளிமையாக, இலகுவாக இக்காட்சிகளை படமாக்க முடிந்தது. மேலும் கடல் அலையின் ஊடாக, நீரின் மட்டத்திலிருந்து சில காட்சிகளை படமாக்கி இருக்கிறோம்.

மேலும்  ‘தொட்டால் தொடரும்’ திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில்  ‘flycam' பயன்படுத்தியிருக்கிறோம். அக்காட்சியில் 'GoPro HERO3' வகை கேமராவை பயன்படுத்தி காட்சிகளை பதிவு செய்தோம். மிக நன்றாக வந்திருக்கிறது.


மொத்தத்தில் இக்கேமராவைக் கொண்டு குறைந்த செலவில் தரமான விடியோக்களை  பதிவு செய்ய முடிகிறது என்றாலும். குறை ஒன்று இருக்கிறது. அது.. இக்கேமராவைப்பயன்படுத்தி ‘wide shot’ மட்டுமே எடுக்க முடியும். காரணம், இதில் 170-degree angle லென்ஸ் மட்டுமே உண்டு. (fixed-lens with a 170-degree angle). இந்த லென்ஸை மாற்ற முடியாது. கேமராவோடு இணைக்கப்பட்டது.

இதேப்போல பல கேமராக்களை மற்ற நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி இருக்கின்றன. Sony Action Cam HDR-AS10, HDR-AS15, Garmin VIRB, JVC GC-XA2, Drift HD Ghost, Polaroid XS7 போன்றவை அவற்றில் சில.

மேலும் விபரங்களுக்கு http://gopro.com/








கருத்துகள்

  1. இந்த வகை கேமராவின் வரலாறும் அதன் பயன்பாடும் அழகாக புரியவைத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. இந்த வகை கேமராவின் வரலாறும் அதன் பயன்பாடும் அழகாக புரியவைத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் செய்யும் அத்துனை பதிவும் மிகவும் உபயோகமாக இருக்கிறது.
    5D Mark iii with CP2 லென்சை பயன் படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் அதனை எவ்வாறு நுணுக்கமாக பயன்படுத்துவது என்பதை கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள். மேலும் அதனை கொண்டு படம் எடுத்துவிட்டால் clarity எந்த அளவில் இருக்கும் என்பதையும் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி filmmaker gopi. இன்றைய தேதியில் 5D-இல் படமெடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதற்கு மூன்று காரணங்கள்.
    1. 5D தரம் போதுமானதில்லை. அதை மட்டுமே முழுமையாக நம்பி படமெடுப்பது அவ்வளவாக நல்லதில்லை என்பது என் அனுபவ அறிவு. சிறப்பான கதை, தகுதியான கலைஞர்கள், கவனமான ஆக்கம் போன்றவை இல்லாதபோது, தரமான படைப்புகளை உருவாக்க முடியாமல் போய் விடுகிறது. குறைந்த விலையில் ஒரு கேமரா என்பதே..ஒரு விதமான அலட்சிய மனோபாவத்தை அது உண்டாக்கி விடுகிறது. தேவையான விலக்குகள் இல்லாமல், கருவிகள் இல்லாமல், கதை இல்லாமல், அனுபவமில்லாமல், ஒரு கேமராவை மட்டும் தூக்கிக்கொண்டு படமெடுக்க போவதனால்.. தரமற்ற பல படங்கள் இன்று உருவாகிவிட்டன.


    2. 5D-ஐ விட தரமான படங்களை எடுக்கக்கூடிய விலை குறைந்த கேமராக்கள் வந்துவிட்டன. ஆயினும் அவை 5D- ஐ விட கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்க கூடியவை. ஆனால் தரமானவை.

    3. இன்று 5D -இல் படமெடுத்தால் அதை விற்பதற்கோ, வெளியிடுவதற்கோ பெரும்பாடு பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி சார். மற்றவர்கள் கேட்டதும் கற்றுகொடுக்கும் மனோபாவம் இன்னுவரை சினிமாவில் யாரிடமும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் மிக முக்கிய கருவாக சினிமாவில் கருதக்கூடிய Cinemotography பற்றி சொல்லி கொடுப்பது மிக அரிது. உண்மையாக சொல்லப்போனால் உங்களின் "கற்றதும் பெற்றதும் யாவருக்கும்" என்ற சொல் என்னையும் அப்படி தூண்டி விட்டது நான் கற்றுக்கொண்ட சினிமா இயக்குவது எப்படி என்ற விஷயங்களை என் கை பேசி எண் கொடுத்தும் Face book ல் post ஆகவும் செய்திருக்கிறேன். பல நண்பர்கள் இதனால் குறும்படம் எடுத்து இருக்கிறார்கள் என்பதிலும் மகிழ்ச்சி. என்னுடைய சினிமா வட்டம் சிறிது பெரிதாகி இருக்கிறது. இதற்க்கு முழு காரணம் நீங்கள். நன்றி சார்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...