முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இசையும் இசை நிமித்தமும்: இசை கேட்டல்

பொதுவாக இசை   கேட்பதில் இரண்டு விசயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று எதைக் கேட்கிறோம் என்பது, மற்றொன்று எப்படிக் கேட்கிறோம் என்பது.  எதைக் கேட்கிறோம் என்பது அவரவர் ரசனை சார்ந்தது, மனம் சார்ந்தது. அல்லது அவரவர் அனுபவம், வாசிப்பு, பயணம், அறிமுகப்படுத்திக்கொள்ளல், திறந்த நிலை, கடந்தவந்த வாழ்வைப் பொருத்தது.  எப்படிக் கேட்கிறோம் என்பது முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்தது. ஆமாம்.. தொழில்நுட்பம் சார்ந்ததுதான். கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமான ஸ்டேட்மெண்டாகத் தெரிகிறதா..? விளக்குகிறேன்.  ஒரு நல்ல இசையை முழுமையாக ருசிக்க முதன்மையானது ஒரு நல்ல ‘ஒலிபெருக்கி’ (Speakers). Hi-Fi Music Systems, Home Theatre System, Portable Music system, MP3 Docking Systems, CD/Radio Cassette Players, iPod/Non-iPod Music system என எதுவாகவும் இருக்கட்டும். அதிலிருந்து வெளிப்படும் இசையை தரத்தோடு வழங்கக்கூடியதாக அதன் Speakers இருக்க வேண்டும். Speakers என்று பொதுவாக அழைத்தாலும், அதில் Driver, Tweeter, Satellite, Subwoofer என பல உள்குத்துகள் இருக்கின்றன. முன்னதாக நமக்குத் தெரியவேண்டிய...

ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை:

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் ஸ்டியோ அருண் கூட பலமுறை கேட்டு விட்டார், ஒளிப்பதிவு குறித்தான பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்துங்கள் என்று. சில காரணங்களால் அதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தோம். ஆனால், இம்மாதம் (Nov) 7 மற்றும் 8 - ஆம் தேதிகளில் அதை நடத்துவதற்கான வாய்ப்பும், நேரமும் கூடி வந்தது. நடத்தி விட்டோம்! பலர் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தபோதும் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. தீபாவளி ஒருபுறம், மழை மற்றொரு புறம் என தடைகளுக்கும் குறைவில்லை. ஆயினும் நாற்பத்தி நான்கு பேர் கலந்துகொண்டார்கள். கலந்துகொண்டவர்களில், வெவ்வேறு துறை சார்ந்தவர்களும் இருந்தது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. விஷுவல் கம்யுனிகேஷன் படிப்பவர்கள், இன்ஜினியரிங் படிப்பவர்கள், கணினித் துறையில் வேலை செய்பவர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குனர்கள் மட்டுமல்லாது ஆட்டோ ஓட்டுனர், தச்சு வேலை செய்பவர், கல்லூரி ஆசிரியர் என பலரும் ஆர்வமாக கலந்துகொண்டார்கள். அமெரிக்காவில் கணினி வேலை செய்பவரும், பெங்களூரில் இருந்தும், இலங்கையிலிருந்த...