கே.என்.சிவராமன் // இரண்டரை மணி நேரத்தில் இவ்வளவு கதை சொல்ல முடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது ‘அழகு குட்டி செல்லம்‘. வணிக சினிமாவின் எல்லைக்கு உட்பட்டு உருவாகியுள்ள தரமான கமர்ஷியல் படம். ஒவ்வொரு ப்ரேமையும் நெகிழ வைக்கும் ஒரு பக்க கதையாக செதுக்கியிருக்கிறார் எழுதி, இயக்கியிருக்கும் Antony Charles சார்லஸ். மருந்துக்கும் எதிர்மறை கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால், பரபரவென திரைக்கதை நகர்கிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும், இசையும் படத்துக்கு பெரிய பலம்.ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் Vijay Armstrong நிச்சயம் இந்தப் படத்துக்கு பிறகு பேசப்படுவார்.ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளரான, வேத் சங்கர் சுகவனம் -‘மதுபானக் கடை‘யை தொடர்ந்து இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்துமே செவியை வருடுகின்றன. பின்னணி இசையோ மனதை மயக்குகிறது.நா.முத்துகுமாரின் கிரீடத்தில் மேலும் ஓர் இறகு.பத்திரிகையாளராகவும், சின்னத்திரை இயக்குநராகவும் முத்திரை பதித்த ‘நீயா நானா‘ ஆண்டனி திருநெல்வேலி Neeya Naana Anthony Thirunelveli -இந்தப் படத்தின் வழியாக திரைப்பட தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார்.இப்படி வலிமையானவர்களு
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!