காலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்பது ஆறுபோல் எப்போதும் ஒரே திசை நோக்கி ஓடக்கூடியது அல்ல ! காலமானது .. ஒரு தடாகத்தில் கல்லை எறிந்தால் நீரில் அடுத்தடுத்து வளையங்களாக எழும் அலைகளைப் போன்றது ! இவ்வரிகளை அண்மையில் படித்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் பார்த்தேன் . ஆச்சரியமாக இருக்கிறது . நவீன அறிவியல் சொல்லும் அதே கருத்தைக்கொண்டு அண்மையில் ஒரு திரைப்படமும் பார்த்தேன் . இரண்டுமே சிறுவர்களுக்கானது என்று நம்பப்படும் ( தவறாக ) பிரிவைச்சார்ந்த கலை படைப்புகள் . ‘ தோர்கல் - சிகரங்களின் சாம்ராட் ’ என்னும் காமிக்ஸ் தான் அந்த அற்புத புத்தகம் . Vikings- களை அடிப்படையாக கொண்ட இக்காமிக்ஸ் , மற்ற காமிக்ஸிலிருந்து தனித்துவமானது . கதை சொல்லும் போக்கு , அதிலிருக்கும் ஃபேண்டஸி , அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் என இத்தொடர் ஒரு கவித்துவமானதும் கூட . இதுவரை காமிக்ஸ் படிக்காதவர்களுக்கு கூட இப்புத்தகத்தை பரிந்துரைக்கிறேன் . ...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!