காலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல. மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு..
காலம் என்பது ஆறுபோல் எப்போதும் ஒரே திசை நோக்கி ஓடக்கூடியது அல்ல! காலமானது.. ஒரு தடாகத்தில் கல்லை எறிந்தால் நீரில் அடுத்தடுத்து வளையங்களாக எழும் அலைகளைப் போன்றது!
இவ்வரிகளை அண்மையில் படித்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் பார்த்தேன். ஆச்சரியமாக இருக்கிறது. நவீன அறிவியல் சொல்லும் அதே கருத்தைக்கொண்டு அண்மையில் ஒரு திரைப்படமும் பார்த்தேன். இரண்டுமே சிறுவர்களுக்கானது என்று நம்பப்படும்(தவறாக) பிரிவைச்சார்ந்த கலை படைப்புகள்.
‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’ என்னும் காமிக்ஸ் தான் அந்த அற்புத புத்தகம். Vikings- களை அடிப்படையாக கொண்ட இக்காமிக்ஸ், மற்ற காமிக்ஸிலிருந்து தனித்துவமானது. கதை சொல்லும் போக்கு, அதிலிருக்கும் ஃபேண்டஸி, அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் என இத்தொடர் ஒரு கவித்துவமானதும் கூட. இதுவரை காமிக்ஸ் படிக்காதவர்களுக்கு கூட இப்புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.
அடுத்து.. அண்மையில் வெளியாகிய ஸ்பைடர்மேன் திரைப்படமான ‘SPIDER MAN INTO THE SPIDER VERSE’ திரைப்படம்தான் நான் குறிப்பிட்ட காலம் தொடர்பான திரைப்படம். பல்வேறு காலத்திலிருந்து வந்து சேரும் பல ஸ்பைடர்மேன்களைப் பற்றியப்படம் இது. பொழுதுபோக்குதான் ஆதாரம் எனினும், அறிவியல், ஆன்மீகம், இருப்பு, வாழ்வு குறித்தான பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தவல்ல திரைப்படம் இது. பலரும் இது குழந்தைகளுக்கானப்படம் என்று தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் அது அப்படி அல்ல. திரைப்படங்களின் மீது ஆர்வம் கொண்ட அத்துணை நண்பர்களுக்கும் இத்திரைப்படத்தை பரிந்துரைக்கிறேன்.
மேலும்… Netflix இல் ‘VIKINGS’ என்றொரு நீண்டதொரு தொடர் இருக்கிறது. வரலாறும் புனைவும் கலந்த அத்தொடர் மற்றொரு அற்புதம். History Channel இல் தயாரிப்பான இது. போர்க்கலம், வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம், காதல், நம்பிக்கை, துரோகம், இரத்தம் என நிரம்பிக்கிடக்கும் இத்தொடர், அதையும் தாண்டி பல அற்புத கணங்களை கொண்டிருக்கிறது. வரலாற்றின் ஊடாக ஒரு புதிய பார்வையை இத்தொடர் உண்டாக்கும். தவற விடாதீர்கள் நண்பர்களே..!
கருத்துகள்
கருத்துரையிடுக